பேராபத்து! கரும் புகைகளை கக்கும் கனரக வாகனங்கள்; காற்று மாசோடு கொடிய நோய்களுக்கும் வழி| Dinamalar

தமிழ்நாடு

பேராபத்து! கரும் புகைகளை கக்கும் கனரக வாகனங்கள்; காற்று மாசோடு கொடிய நோய்களுக்கும் வழி

Added : ஜூலை 22, 2021
Share
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கரும் புகைகளை கக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசு படுவதோடு கொடிய நோய்களுக்கும் வழி வகுக்கிறது. மாவட்டம் பட்டாசு, தீப்பெட்டி, பருப்பு, உளுந்து, காலண்டர், பாண்டேஜ் உற்பத்தி என பல தொழில்களுடன் வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கிருந்து லாரி போன்ற கனரக வாகனங்கள் மூலம் உற்பத்தி பொருட்கள் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கரும் புகைகளை கக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசு படுவதோடு கொடிய நோய்களுக்கும் வழி வகுக்கிறது.

மாவட்டம் பட்டாசு, தீப்பெட்டி, பருப்பு, உளுந்து, காலண்டர், பாண்டேஜ் உற்பத்தி என பல தொழில்களுடன் வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கிருந்து லாரி போன்ற கனரக வாகனங்கள் மூலம் உற்பத்தி பொருட்கள் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன.

அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலுக்கு தேவையான மூல பொருட்களும் கனரக வாகனங்கள் மூலம் இங்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் பெரும்பாலான வாகனங்கள் கொசு மருந்து அடிக்கும் வண்டியை போல் கரும் புகையை கக்கி கொண்டே செல்கின்றன . இக் கரும்புகையால் காற்று மாசுப்படுவதுடன் சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.

வாகனங்களின் புகைப்போக்கிகளை எப்.சி., போன்ற ஆய்வின் போது மட்டும் பராமரிக்கும் நிலையில் மற்ற நேரங்களில் கண்டுக்கொள்வதில்லை. ஹெல்மெட்டுக்கு தணிக்கை செய்வது போல் அதிக புகை வெளிப்படுத்தும் வாகனங்களையும் கண்காணித்து, இது போன்ற வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவில் மாசு குறையவும் வாய்ப்புள்ளது........

தலைநகரையே அச்சுறுத்தும் புகைபொருட்கள் பரிமாற்றத்தின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் கனரக வாகனங்களின் பங்கு அளப்பரியது. அதே நேரத்தில் நாட்டின் தலைநகரையே மாசுப்புகை அச்சுறுத்தி வருகிறது. மாநிலத்தின் முக்கிய தொழில் மாவட்டமான இங்கும் அதேநிலை வராத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரெங்கராஜா, சமுக ஆர்வலர்,விருதுநகர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X