போலீஸ் டைரி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தற்கொலைக்கு துாண்டியோருக்கு 'கம்பி'கொரட்டூர்: கொரட்டூர், பஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வந்தவர் செல்வகுமார், 44. இவரது மனைவி சரஸ்வதி, 38. மகள்கள் பிரியா, 17, காவியா, 16. நேற்று முன்தினம் செல்வகுமார் கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.கொரட்டூர் போலீசாருக்கு, செல்வகுமார் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், 'என் சாவுக்கு காரணம் பிரகாஷ், தியாகராஜன். பிரகாஷிடம் 4 லட்சம் ரூபாய்

தற்கொலைக்கு துாண்டியோருக்கு 'கம்பி'கொரட்டூர்: கொரட்டூர், பஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வந்தவர் செல்வகுமார், 44. இவரது மனைவி சரஸ்வதி, 38. மகள்கள் பிரியா, 17, காவியா, 16. நேற்று முன்தினம் செல்வகுமார் கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.கொரட்டூர் போலீசாருக்கு, செல்வகுமார் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், 'என் சாவுக்கு காரணம் பிரகாஷ், தியாகராஜன். பிரகாஷிடம் 4 லட்சம் ரூபாய் கடனுக்கு, வட்டி மட்டும் 10 லட்சம் ரூபாய் கட்டியுள்ளேன். தியாகராஜனிடம் 10 லட்சம் ரூபாய் கடனுக்கு, 33 லட்சம் ரூபாய் வட்டி கட்டியுள்ளேன். மனநிம்மதி இல்லை' என, எழுதி இருந்தார். போலீசார் பிரகாஷ் மற்றும் தியாகராஜனை நேற்று கைது செய்தனர்.பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைதுஐஸ்ஹவுஸ்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 50; மாநகர பஸ் ஓட்டுனர். இவர், 15ம் தேதி, பிராட்வேயில் இருந்து புறப்பட்டு, ஐஸ்ஹவுஸ் டாக்டர் நடேசன் சாலை வழியாக பஸ்சை ஓட்டி சென்ற போது, மர்ம நபர் ஒருவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து தப்பினார். ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, புளியந்தோப்பு பாலு தெருவைச் சேர்ந்த நரேஷ், 25, என்பவரை கைது செய்தனர்.பள்ளியில் திருடியவர் சிக்கினார்வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், தேவர் தெருவிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், ஜூன், ௨௬ம் தேதி புகுந்த மர்ம நபர், மாணவர் சேர்க்கைக்காக பெற்ற 1.65 லட்சம் ரூபாயை, பீரோவிலிருந்து திருடி தப்பினார். வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட கிழக்கு தாம்பரம், சேலையூரைச் சேர்ந்த ஹாரி பிலிப், 55, என்பவரை, நேற்று கைது செய்தனர்.பணம் திருடியவருக்கு 'காப்பு'விருகம்பாக்கம்: கோடம்பாக்கம், ஆர்.என்.நம்பியார் தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன், 36. விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில், ஐஸ்கிரீம் குடோன் நடத்துகிறார். நேற்று காலை பார்த்த போது, கல்லாவில் இருந்து, 2,500 ரூபாய் திருடு போயிருந்தது. விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட விருகம்பாக்கம், தாங்கல் தெருவைச் சேர்ந்த அரவிந்தன், 21, என்பவரை கைது செய்தனர்.நுாதன முறையில் 'ஆட்டை'பட்டினப்பாக்கம்: ராஜா அண்ணாமலைபுரம், கற்பகம் அவென்யூவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 70. நேற்று காலை இவரது வீட்டிற்கு வந்த வாலிபர், கேபிள் பழுதடைந்து உள்ளதாக கூறியுள்ளார். அதை சரிசெய்ய கோபாலகிருஷ்ணனை அழைத்து, வீட்டின் மாடிக்கு சென்றார். அவரிடம் கேபிள் ஒயரை பிடித்துக் கொள்ளுமாறு கூறி, கீழே சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த கோபாலகிருஷ்ணன் கீழே சென்று பார்த்தபோது, மடிக்கணினி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரியவந்தது. பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.'கிரெடிட் கார்டில்' ரூ.1.13 லட்சம் மோசடிஅண்ணா சதுக்கம்: சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிபவர், மாலதி, 30. இவர் எஸ்.பி.ஐ., வங்கி 'கிரெடிட் கார்டு' பயன்படுத்தி வருகிறார். தன் கார்டில் உள்ள 'கார்டு பாதுகாப்பு சேவை'யை ரத்து செய்ய, வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தெரிவித்தார். அதற்கு பின், இன்னொரு எண்ணில் இருந்து பேசிய நபர், வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, அவரது மொபைல் போனுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டுள்ளார். மாலதி ரகசிய எண்ணை அளித்ததும், அவரது கிரெடிட் கார்டில் இருந்து, 1.13 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவில் உண்டியல் உடைப்புபட்டாபிராம்: பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி, 45, இதே பகுதியில் சாய்பாபா கோவிலை நிர்வகித்து வருகிறார். நேற்று காலை, கோவிலை திறக்கச் சென்ற போது, அங்கிருந்த உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை திருடியது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலி டாக்டர் நகையுடன் தலைமறைவுசென்னை: வேளச்சேரியில் நகை கடை வைத்துள்ளவர் சக்திவேல். சில தினங்களுக்கு முன், இவரது கடைக்கு டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர் சஞ்சய் என, அறிமுகம் செய்துள்ளார். பின், மனைவிக்கு நகை வாங்க வேண்டும் என்றும், என்ன மாடல் என தேர்வு செய்து வைத்து செல்கிறேன்; நகையை மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்புங்கள்; பணத்தை கொடுத்து விடுகிறேன் எனக் கூறி சென்றுள்ளார்.சக்திவேலும் மருத்துவமனைக்கு வந்து, அந்த நபரிடம் ஆறரை சவரன் நகையை கொடுத்துள்ளார். நகையை படம் எடுத்து மனைவிக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறி சென்றவர், நகையுடன் மாயமானார். இது குறித்து மருத்துவமனை வளாக போலீசார் விசாரிக்கின்றனர்.போதை பொருள் கடத்தியோர் கைதுமணலி: மணலி, ஆண்டார்குப்பம் சந்திப்பில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரை செல்வன் தலைமையிலான போலீசார், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சோதனை செய்ததில், மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சீவல், 25 கிலோ சிக்கியது. விசாரணையில், பிடிபட்டவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சீனிவாசன், 28, சிற்பி, 24, என்பது தெரியவந்தது. இருவரையும் மணலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மொபைல் போன் பறித்தோர் சிக்கினர்செங்குன்றம்: செங்குன்றம், இந்திரா நகரில் மொபைல் போன் திருடர்கள் பதுங்கி இருப்பதாக, மாதவரம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து; அவர்களை கைது செய்தனர். விசாரணையில், காந்தி நகரைச் சேர்ந்த சூர்யா, 19, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 மொபைல் போன்கள், ஒரு டூ - வீலர், 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.பெண்ணிடம் மொபைல் போன் பறிப்புவேளச்சேரி: வேளச்சேரி, பத்மநாபன் நகரைச் சேர்ந்த தியாஜோஸ், 25, நேற்று வேளச்சேரி, ராம்நகர் நோக்கி நடந்து சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இவரை தாக்கி, மொபைல் போனை பறித்து தப்பினர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X