பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டாகியும் எட்டாத தீர்வு; தத்தளிக்கும் செட்டியார்பட்டி மக்கள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே பராமரிப்பு இன்றி சேதமுற்ற மங்கம்மாள் சாலைக்கு 10 ஆண்டாகியும் தீர்வு கிடைக்காது செட்டியார்பட்டி பேரூராட்சி சுற்று பகுதி மக்கள் தவிக்கின்றனர்.சொக்கநாதன்புத்துாரில் இருந்து முகவூர் வரும் ரோட்டில் அம்பேத்கர் நகர் அருகே ரேஷன் கடையில் தொடங்கி செட்டியார்பட்டி முகவூர் மெயின் ரோட்டை அடையும் மங்கம்மா சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாக

தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே பராமரிப்பு இன்றி சேதமுற்ற மங்கம்மாள் சாலைக்கு 10 ஆண்டாகியும் தீர்வு கிடைக்காது செட்டியார்பட்டி பேரூராட்சி சுற்று பகுதி மக்கள் தவிக்கின்றனர்.

சொக்கநாதன்புத்துாரில் இருந்து முகவூர் வரும் ரோட்டில் அம்பேத்கர் நகர் அருகே ரேஷன் கடையில் தொடங்கி செட்டியார்பட்டி முகவூர் மெயின் ரோட்டை அடையும் மங்கம்மா சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து பொது மக்கள் உபயோகிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

இதனால் இப்பகுதி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகி வருகிறது. இப்பகுதியினர் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை.எனவே மக்கள் பயன்பாட்டிற்கு அவசியமான இந்த ரோட்டில் உள்ள பாலங்களை சீரமைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடை சீரமைத்து, முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X