சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மின்சாரம் பாய்ந்து மாணவன் பலிமுத்தாபுதுப்பேட்டை: முத்தாபுதுப்பேட்டை, டிபன்ஸ் காலனியைச் சேர்ந்தவர் மோதிசிங் பட்டி, 16; பிளஸ் 2 மாணவர். இவரது தந்தை, மிட்னமில்லி பகுதியில் நடத்தும் துணிக்கடையில், நேற்று முன்தினம் மாலை, அவருக்கு உதவியாக இருந்தார். கடையின் மின்சார பெயர் பலகையை சுத்தம் செய்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலிமுத்தாபுதுப்பேட்டை: முத்தாபுதுப்பேட்டை, டிபன்ஸ் காலனியைச் சேர்ந்தவர் மோதிசிங் பட்டி, 16; பிளஸ் 2 மாணவர். இவரது தந்தை, மிட்னமில்லி பகுதியில் நடத்தும் துணிக்கடையில், நேற்று முன்தினம் மாலை, அவருக்கு உதவியாக இருந்தார். கடையின் மின்சார பெயர் பலகையை சுத்தம் செய்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மோதிசிங் பட்டி இறந்தார். முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மின் கம்பத்தில் துாக்கிட்டு தற்கொலைநங்கைநல்லுார்: நங்கைநல்லுார், லட்சுமி நகர், 10வது தெருவில் உள்ள உயர் மின் கம்பத்தின் மீது ஏறிய நபர், நேற்று மாலை திடீரென கயிற்றை கட்டி துாக்கில் தொங்கினார். போலீசார் விரைந்து, அந்த நபரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. விசாரணையில் உள்ளகரம், கருணாநிதி நகர் பாரதி குறுக்கு தெருவை சேர்ந்த கோதண்ட ராமன், 46, என்பதும் கிண்டி ராஜ்பவனில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிந்ததும் தெரியவந்தது. குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்ததாக தெரிகிறது. பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர். வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், ராஜாஜி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 51; அயனாவரம் ரயில் பெட்டி தொழிற்சாலை பணியாளர். இவரது மது பழக்கத்தால் அவரது மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த சந்தோஷ்குமார், நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X