சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி அதிகாரி போல நடித்து வண்ணாரப்பேட்டையில் மோசடி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கொருக்குப்பேட்டை--நடைமுறையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி, புது நோட்டை தருவதாக கூறி, நகை வியாபாரியிடம் 50 ஆயிரம் ரூபாய் 'ஆட்டை' போட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் வினோத், 50. நேற்று காலை இவரது மொபைல் போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.அதில் பேசிய மர்ம நபர், வண்ணாரப்பேட்டையில் உள்ள

கொருக்குப்பேட்டை--நடைமுறையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி, புது நோட்டை தருவதாக கூறி, நகை வியாபாரியிடம் 50 ஆயிரம் ரூபாய் 'ஆட்டை' போட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் வினோத், 50. நேற்று காலை இவரது மொபைல் போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.அதில் பேசிய மர்ம நபர், வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவும், நடைமுறையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகள் தரப்படுகிறது; இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இதை நம்பிய வினோத், தன் கடை ஊழியர் பாபு 24, என்பவரிடம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்து அனுப்பினார்.குறிப்பிட்ட வங்கிக்கு பாபு சென்ற போது, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர், 50 ஆயிரம் ரூபாய் வாங்கினார். பின் 'செலான்' எழுதுவது போல சென்றவர் திடீரென மாயமானார்.இது குறித்து பாபு வங்கியில் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X