சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மன் கோவில்களில் கொள்ளை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை-ஆடி மாதம் முதல் வாரத்திலேயே, அம்மன் கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், சனிக்கிழமை முதல், ஆடி மாத கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. பக்தர்கள் பலரும் தங்களின் நேர்த்திக்கடனாக, அம்மனுக்கு

ஆர்.கே.பேட்டை-ஆடி மாதம் முதல் வாரத்திலேயே, அம்மன் கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், சனிக்கிழமை முதல், ஆடி மாத கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. பக்தர்கள் பலரும் தங்களின் நேர்த்திக்கடனாக, அம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகின்றனர்.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் ஏரிக்கரையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த, ஒன்றரை சவரன் தாலி சரடு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உண்டியல் உறுதியாக இருந்ததால், கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது.இதே போல், கோபாலபுரம் அடுத்த, நேசனூர், கங்கயைம்மன் கோவிலிலும், நேற்று முன்தினம் கொள்ளை நடந்துள்ளது. இதில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் உண்டியலில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

sahayadhas - chennai,பஹ்ரைன்
22-ஜூலை-202111:19:37 IST Report Abuse
sahayadhas பரவா இல்லை, எப்போதும் உள்ளது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X