பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் டி.வி.ஆர்.,: நினைவு தின நிகழ்ச்சியில் புகழாரம்

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க அலுவலகத்தில் நடந்த நோட்டு புக் வழங்கும் நிகழ்ச்சியில், 'ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்காக பாடுபட்டவர் டி.வி.ஆர்.,'என மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குனர் பாலாஜி புகழாரம் சூட்டினார்.அவர் பேசியதாவது: அன்றைய நாஞ்சில் நாட்டை தமிழகத்துடன்
 ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் டி.வி.ஆர்.,: நினைவு தின நிகழ்ச்சியில் புகழாரம்

மதுரை : தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க அலுவலகத்தில் நடந்த நோட்டு புக் வழங்கும் நிகழ்ச்சியில், 'ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்காக பாடுபட்டவர் டி.வி.ஆர்.,'என மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குனர் பாலாஜி புகழாரம் சூட்டினார்.

அவர் பேசியதாவது: அன்றைய நாஞ்சில் நாட்டை தமிழகத்துடன் இணைக்க உறுதியான ஆயுதம் வேண்டும், அந்த ஆயுதம் நாளிதழ் என உணர்ந்த டி.வி.ஆர்., அவரது பூர்வீக சொத்து, வருமானம் அனைத்தையும் நாளிதழ் என்ற பெரும் கடலில் கொட்டினார். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்காக பாடுபட்டவர்.தனக்கென்று தனிப்பெருமை கொண்டிருந்த அன்றைய நாஞ்சில் நாடான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவிடம் இருந்து மீட்டார். குன்றிலிட்ட விளக்காக சுடரொளி வீசும் டி.வி.ஆர்., மறைந்தும் அவர், எழுத்துக்கள் வழியாக நமக்கெல்லாம் வழிகாட்டி கொண்டிருக்கிறார், என்றார்.

மாநில துணை பொதுச் செயலாளர் இல.அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம், நகர் செயலாளர் பாபு, எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி வெங்கடாச்சலம், மாவட்ட முன்னாள் பொருளாளர் விஜயன், இளைஞரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.


சிறந்த ஆன்மிகவாதி


மற்றொரு நிகழ்ச்சியில் பிராமணர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது: டி.வி.ஆர்., கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடுடன் இணைவதற்கு காரணமாக இருந்தவர். சுதந்திர போராட்டத்திற்காக அரும்பாடுபட்டவர். சிறந்த ஆன்மிகவாதி என புகழாரம் சூட்டினார்மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, பெருளாளர் குழந்தைசாமி, பழங்காநத்தம் கிளை தலைவர் முத்துகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி கிளை பொருளாளர் ராமமூர்த்தி, அமைப்பு செயலாளர் சந்திரசேகர், எல்லீஸ் நகர் பொருளாளர் சாம்பசிவம், கோச்சடை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202120:56:54 IST Report Abuse
rupya ஒரு தனி மனிதராக இருந்து தன் சொத்தை விற்று பல ஆயிரம் பேர் கூடி செய்ய வேண்டிய போராட்ட வேலையை ஒரு பத்திரிகை மூலமாக சாதித்த பெருமைக்குரியவர் டிவிஆர் அவர்கள். அன்றைய தமிழக பிராம்மணர்களில் பிரதி பலன் எதிர்பாராமல் பல பெருந்தகையாளர்கள் செயற்கரிய செயல்களை எந்த வித விளம்பர ஆரவாரமின்றி சாதித்து தமிழை வளர்த்துள்ளனர். இந்திய நாட்டில் பிராம்மணன் என்போரில் சுமார் நூறு வகையான பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளிலும் ஏற்றத் தாழ்வுகள் நிரம்ப உள்ளன.சில அறிவிலிகள் அவர்களை ஆரிய பிரிவினர் என்கின்றனர். அது உண்மையில்லை பிராம்மணர்கள் அந்தந்த மாநில மொழி வழிகளில் உருவானவர்கள். அவர்கள் மற்றவர் போல் மொழிப்பற்றுள்ளவர்கள். தமிழகத்தில் தமிழ் மொழி பெருமையை தமிழனின் பெருமையாக தூக்கி நிறுத்திய பெருந்தகை உ.வே.சுவாமி நாதய்யர்.அவர் அதை செய்ததால் தான் திராவிட கட்சியினர் அவர்களை இன மான தமிழன் என்று பறையடிக்கிறார்கள்.செம்மொழி என்கிறார்கள். பராசக்தி வசனத்தை எதுகை மோனையில் ஆரியன் மேல் சாட்டுகிறார்கள். சுவாமி நாதய்யருக்கு நிகராக நல்ல தமிழை செய்திகளில் கொண்டு சென்று நாஞ்சிலை அமைதியாக பிரித்தெடுத்து தமிழ் பகுதியாக்கிய டிவிஆரின் செயல்பாடுகள் தமிழக வரலாற்றில் தவறாது பதிவாக வேண்டியவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X