100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

Added : ஜூலை 22, 2021
Share
காஞ்சிபுரம்-நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம்; பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும்,

காஞ்சிபுரம்-நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம்; பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அனைத்து தோட்டக்கலைப் பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, இரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ் ஆகியவை தேவை.இத்திட்டத்துடன் இணைத்து, மின் மோட்டார் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.மேலும், காய்கறி பரப்பை அதிகப்படுத்த, இலவச காய்கறி நாற்றுகள் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை மானியங்கள் வழங்கப்படுவதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை, 79046 84006, 95004 27366, 97898 61125 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X