பொது செய்தி

தமிழ்நாடு

முழுவீச்சில் தடுப்பூசி பணி: கலெக்டர் பேச்சு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை : ''மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடக்கிறது'' என மதுரையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த விழாவிற்கு துணை அவைத் தலைவர் ஜோஸ், அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு, வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் புகழகிரி முன்னிலை

மதுரை : ''மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடக்கிறது'' என மதுரையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த விழாவிற்கு துணை அவைத் தலைவர் ஜோஸ், அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு, வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் புகழகிரி முன்னிலை வகித்தனர். ரத்த தானம் செய்த வழக்கறிஞர் முத்துக்குமார், ராஜ்குமார், வைரமுத்து உள்ளிட்டோரை பாராட்டி கலெக்டர் பேசியதாவது: கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் ரத்த தானம் செய்ய காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.டாக்டர் குருசுந்தர், பொருளாளர் சுதர்சனம் பங்கேற்றனர். செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X