நுாலகத்திற்கு பொதுப்பணித்துறை இடத்தை தேர்வு செய்ய பரிசீலனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்திற்கு பொதுப்பணித்துறை இடத்தை தேர்வு செய்ய பரிசீலனை

Added : ஜூலை 22, 2021
Share
மதுரை : மதுரையில் ரூ.70 கோடியில் அமையவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான நுாலகத்திற்கு புது நத்தம் ரோடு டீன் குவார்ட்டர்ஸ் அருகிலுள்ள பொதுப்பணித்துறை இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.இந்நுாலகத்திற்குமாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பின்புறம், பழைய சென்ட்ரல் மார்க்கெட், உலக தமிழ்ச்சங்க வளாகம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளன.இந்த இடங்களை

மதுரை : மதுரையில் ரூ.70 கோடியில் அமையவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான நுாலகத்திற்கு புது நத்தம் ரோடு டீன் குவார்ட்டர்ஸ் அருகிலுள்ள பொதுப்பணித்துறை இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நுாலகத்திற்குமாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பின்புறம், பழைய சென்ட்ரல் மார்க்கெட், உலக தமிழ்ச்சங்க வளாகம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளன.இந்த இடங்களை கடந்த மாதம் ஆய்வு செய்த அமைச்சர்கள் வேலு, மூர்த்தி வேறுசில இடங்களையும் தேர்வு பரிசீலிக்க உத்தரவிட்டனர்.டீன் குவார்ட்டர்ஸ் அருகே பொதுப்பணித்துறை இடத்தை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இந்த இடத்தில் 1912ல் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பொறியாளர் குவார்ட்டர்ஸ் உள்ளது.

தற்போது பெரியாறு, வைகை உதவி செயற்பொறியாளர் குடியிருப்பாக உள்ளது.நுாலகத்திற்கான இடத்தை இறுதி செய்ய இன்று (ஜூலை 22) அமைச்சர் வேலு, பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா வருகின்றனர். அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அடிப்படையில் இடத்தை முதல்வர் ஸ்டாலின் இறுதி செய்து அறிவிப்பார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X