போலீஸ் டைரி...

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தனியார் ஊழியர் பலி காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரி, 24; ஒரகடம் பகுதி தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் அருகில், பின்னால் வந்த லாரி மோதியதில், அருணகிரி பலத்த காயம் அடைந்தார்.அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு

தனியார் ஊழியர் பலி காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரி, 24; ஒரகடம் பகுதி தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் அருகில், பின்னால் வந்த லாரி மோதியதில், அருணகிரி பலத்த காயம் அடைந்தார்.அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.'பங்க்' ஊழியர் மர்ம மரணம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த நெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 38. வேடல் பகுதி பெட்ரோல் 'பங்க்'கில் வேலை பார்த்து வந்தார்.நேற்று, பங்க் அருகில் சிறுநீர் கழிக்க செல்லும்போது மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். அங்கிருந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன், இறந்து விட்டார்.இதையறிந்த பாலசுப்ரமணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். சடலத்தை மீட்ட போலீசார் கூறுகையில், 'உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின்தான் தெரியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X