பஸ்கள் இயக்கம் தாமதம் பயணியர் கடும் சிரமம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்போரூர்-திருப்போரூர் பஸ் நிலையத்திலிருந்து தாம்பரம், பாரிமுனை, தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 95 பஸ்கள், 352 நடைகளில் புறப்பட்டுச் சென்றன.இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, தற்போது இயக்கப்படுகிறது.ஆனால், முன் போல், திருப்போரூரிலிருந்து தாம்பரம், பாரிமுனை, தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள்

திருப்போரூர்-திருப்போரூர் பஸ் நிலையத்திலிருந்து தாம்பரம், பாரிமுனை, தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 95 பஸ்கள், 352 நடைகளில் புறப்பட்டுச் சென்றன.இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, தற்போது இயக்கப்படுகிறது.ஆனால், முன் போல், திருப்போரூரிலிருந்து தாம்பரம், பாரிமுனை, தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.பயணியர் கூறுகையில், 'பல வழிதடத்திலிருந்து வரும் பேருந்துகளை, வழக்கமான நேரத்தில் இயக்காமல், பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைத்து, தாமதமாக இயக்குகின்றனர். 'இதனால், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல், பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது' என்றனர்.மாவட்ட போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:திருப்போரூரிலிருந்து பல வழித்தடங்களுக்கு, 84 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும், இரண்டு, மூன்று நடை இயக்கப்படும்.கொரோனா பாதிப்பு காரணமாக, பயணியர் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால், குறைந்த கட்டண வசூல் கிடைக்கிறது; போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.எனவே பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்தை நிறுத்திவைத்து, பயணியர் கூட்டதிற்கு ஏற்ப பேருந்துகளை இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பேருந்து தாமதமாக அனுப்பப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X