தமிழ்நாடு

மயானத்தில் மின் தகனம் செய்ய பழைய ரசீது வழங்குவதால் குழப்பம்!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி தத்தனேரி மயானத்தில் மின் தகனம் செய்ய ரூ.1350 கட்டணம் வசூலிக்கும் நிலையில் 2006ல் மாமன்ற தீர்மானம்படி நிர்ணயித்த ரூ.300 என அச்சிட்ட பழைய ரசீது வழங்குவதால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.இம்மயானத்தில் விறகு எரியூட்டும் தளங்கள் தவிர இரண்டு மின் யூனிட்டுகள் செயல்படுகின்றன. கடந்த மாதங்களில் கொரோனா தாக்கத்தால்
 மயானத்தில் மின் தகனம் செய்ய பழைய ரசீது வழங்குவதால் குழப்பம்!

மதுரை : மதுரை மாநகராட்சி தத்தனேரி மயானத்தில் மின் தகனம் செய்ய ரூ.1350 கட்டணம் வசூலிக்கும் நிலையில் 2006ல் மாமன்ற தீர்மானம்படி நிர்ணயித்த ரூ.300 என அச்சிட்ட பழைய ரசீது வழங்குவதால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.



இம்மயானத்தில் விறகு எரியூட்டும் தளங்கள் தவிர இரண்டு மின் யூனிட்டுகள் செயல்படுகின்றன. கடந்த மாதங்களில் கொரோனா தாக்கத்தால் இறந்தவர்கள் உடல்கள் 24 மணி நேரமும் எரியூட்டப்பட்டன. கொரோனா காலத்தில் தனியார் அமைப்புகள், சங்கங்கள் சார்பில் ஒரு மாதம் இலவசமாக எரியூட்டப்பட்டன.

கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வருவோருக்கு மாநகராட்சி சார்பில் பி.பி.இ., கிட் இலவசம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இதெல்லாம் மக்களுக்கு உதவியாக இருந்தாலும் பழைய ரசீது குழப்பம் ஏற்படுத்தி வருகிறது. மின் தகனம் செய்ய ரூ.300 கட்டணம் என 2006ல் நிர்ணயித்த கட்டணம் தொகை ரசீது இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது ரூ.1350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காண மாநகராட்சி புதிய ரசீது அச்சிட்டு வழங்க வேண்டும்.நகர்நல அலுவலர் குமரகுருபரனிடம் கேட்டபோது, விரைவில் புதிய ரசீது வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X