தேசிய தர வரிசை பெற்ற மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய தர வரிசை பெற்ற மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரி

Added : ஜூலை 22, 2021
Share
பூவந்தியில்உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் 10 இளங்கலை, 5 முதுகலை துறைகள் செயல்படுகின்றன. 5 நெறியாளர்களுடன் தமிழ் ஆராய்ச்சி துறையும் செயல்படுகிறது. பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல் துறைகள், பி.சி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), கணித துறைகளும், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி,

பூவந்தியில்உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் 10 இளங்கலை, 5 முதுகலை துறைகள் செயல்படுகின்றன. 5 நெறியாளர்களுடன் தமிழ் ஆராய்ச்சி துறையும் செயல்படுகிறது. பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல் துறைகள், பி.சி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), கணித துறைகளும், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.காம்.,(சி.ஏ.,), எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் துறைகளுடன் கல்லுாரி இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் 500 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். 30 மாணவிகள் வரை அழகப்பா பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பெறுகின்றனர். இது இக்கல்லுாரியின் கல்வித்தரத்திற்கு சான்றாக விளங்குகிறது. பல்கலை மானியக்குழு அந்தஸ்தும், தேசிய தர வரிசை நிறுவனம் வழங்கிய 'பி' தகுதியும் பெற்று சமூகத்தில் நன்மதிப்புடன் கூடிய கல்லுாரியாக விளங்குகிறது. விசாலாமான வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 20,000 புத்தகம் கொண்ட நுாலகம், விளையாட்டு மைதானம், விடுதிகளுடன் இயங்குகிறது. கிராமப்புற மாணவிகள் வசதிக்கென 30 பஸ்கள் இயங்குகின்றன.

மகளிருக்கு அழகுகலை, கம்ப்யூட்டர்,அலைபேசி பழுது நீக்கும், பட்டுநுால் நகை பயிற்சிகள் வழங்குகிறோம். உலகதரமான ஐ.டி., நிறுவனங்களான டி.சி.எஸ்.,சி.டி.எஸ்., விப்ரோ போன்ற கம்பெனிகளில் மாணவிகள் பணி வாய்ப்பு பெறுகின்றனர். கலைத்துறை மாணவிகள் ரெய்சிங் ஸ்டார், ஐ.டி.பி.ஐ., எச்டிபி, ஆல்காசைன், சூரிட் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

கிராமப்பற மகளிர் முன்னேற்றத்திற்காக பல வழிகளில் இக்கல்லுாரி உதவி புரிந்து வருகின்றன. திறமையான பேராசிரியர்களை கொண்டு முழு பாதுகாப்புடன் கல்வி வழங்குகிறோம்.- அண்ணாமலை, தலைவர், பூவந்தி ௯௮௪௩௨ ௫௯௧௯௧

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X