தொல்லியல் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு

Added : ஜூலை 22, 2021
Share
மாமல்லபுரம்-வாயலுார் திருப்புலீஸ்வரர் கோவில் வளாகத்திற்கு, தொல்லியல் துறை, சுற்றுச்சுவர் அமைக்கிறது.கல்பாக்கம் அடுத்த வாயலுாரில் கி.பி., 8ம் நுாற்றாண்டில் பல்லவர் அமைத்த திருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது.திருப்புலீஸ்வரர், அங்கையற்கண்ணி, விநாயகர், முருகர், வைகுண்ட பெருமாள் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.மத்திய தொல்லியல் துறை, கோவிலை பராமரித்து நிர்வகிக்க,

மாமல்லபுரம்-வாயலுார் திருப்புலீஸ்வரர் கோவில் வளாகத்திற்கு, தொல்லியல் துறை, சுற்றுச்சுவர் அமைக்கிறது.கல்பாக்கம் அடுத்த வாயலுாரில் கி.பி., 8ம் நுாற்றாண்டில் பல்லவர் அமைத்த திருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது.திருப்புலீஸ்வரர், அங்கையற்கண்ணி, விநாயகர், முருகர், வைகுண்ட பெருமாள் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.மத்திய தொல்லியல் துறை, கோவிலை பராமரித்து நிர்வகிக்க, இப்பகுதியினர், வழிபாட்டிற்கு நிர்வகித்து, ஒரு கால பூஜை நடக்கிறது. கோவிலின், பல ஏக்கர் நிலத்தை, பல ஆண்டுகளுக்கு முன், சிலர் அபகரித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கோவில் வளாக பாதுகாப்பிற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், புதர் சூழ்ந்து சீரழிந்தது; குடிமகன்கள் கூடாராமாக மாறியது.இந்நிலையில், சன்னிதி பகுதியில், பாறை கற்களில் நடைபாதை அமைத்த தொல்லியல் துறை, தற்போது, வளாக பகுதிக்கு, 3 அடி உயர சுற்றுச்சுவர், அதன்மேல் கம்பி தடுப்பு என, அமைக்கிறது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X