பொது செய்தி

தமிழ்நாடு

5 ஒன்றியங்களை எட்டாக்க கோரிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்து வரும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்தது.அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களை எட்டாக பிரிக்க வேண்டும் என, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.இதுதொடர்பாக எம்.எல்.ஏ.,

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்து வரும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்தது.அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களை எட்டாக பிரிக்க வேண்டும் என, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.இதுதொடர்பாக எம்.எல்.ஏ., சுந்தர் கூறியதாவது:பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் தவறாக செயல்படுகின்றனர். அதேபோல், ஊராட்சிகளில் செயல்படும் குடிநீர் ஆப்பரேட்டர்களும் முறையாக செயல்படுவதில்லை.இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்துடனே இவர்கள் செயல்படுகின்றனர்.மேலும், மிகப்பெரிய ஒன்றியமாக உத்திரமேரூர் ஒன்றியம் செயல்படுகிறது. அவற்றை பிரிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருக்கிறது.அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியத்திலிருந்து பரந்துார் ஒன்றியத்தை பிரிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திலிருந்து மேலும் ஓர் ஒன்றியத்தை பிரித்து, மொத்தம் எட்டு ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X