நடைபாதை கடைகள் அகற்ற உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை கடைகள் அகற்ற உத்தரவு

Added : ஜூலை 22, 2021
Share
மாமல்லபுரம்-மாமல்லபுரம், அர்ச்சுனன் தபசு சிற்ப பகுதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.மாமல்லபுரம், அர்ச்சுனன் தபசு சிற்பம் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில், சுற்றுலாவிற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் உள்ளன.இவற்றால், சிற்பங்களை காண்பதில் பயணி யருக்கு சிரமம் ஏற்படுகிறது. வெண்ணெய் உருண்டை பாறை தொல்லியல் வளாகத்திலும்,

மாமல்லபுரம்-மாமல்லபுரம், அர்ச்சுனன் தபசு சிற்ப பகுதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.மாமல்லபுரம், அர்ச்சுனன் தபசு சிற்பம் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில், சுற்றுலாவிற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் உள்ளன.இவற்றால், சிற்பங்களை காண்பதில் பயணி யருக்கு சிரமம் ஏற்படுகிறது. வெண்ணெய் உருண்டை பாறை தொல்லியல் வளாகத்திலும், வியாபாரிகள் முகாமிடுகின்றனர்.இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, கலெக்டர் ராகுல்நாத், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தினார்.மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதி ஆகியோர், நடைபாதை வியாபாரிகளிடம், ஒரு வாரத்திற்குள் கடைகளை அகற்ற வேண்டும் என, நேற்று உத்தரவிட்டனர்.பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதி களில், முக கவசம் அணியாத பயணியரிடம் அபராதம் வசூலித்து, முக கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X