பொது செய்தி

தமிழ்நாடு

இரவு நேர பஸ்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
எஸ்.பி.பட்டினம் : இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மதுரையில் இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு திருவாடானை, தொண்டி வழியாக கோட்டைப்பட்டினம் செல்லும் அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. இதே போல் ஈரோட்டில் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு திருவாடானைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் ,அவசர காரியங்களுக்காக செல்லும் பொதுமக்கள்

எஸ்.பி.பட்டினம் : இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மதுரையில் இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு திருவாடானை, தொண்டி வழியாக கோட்டைப்பட்டினம் செல்லும் அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. இதே போல் ஈரோட்டில் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு திருவாடானைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் ,அவசர காரியங்களுக்காக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.பட்டினம் சாகுல்ஹமீது கூறியதாவது: இரவுநேர பஸ்கள் நிறுத்தபட்டதால் குடும்பத்துடன் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மதுரை, ஈரோடு பஸ்ஸ்டாண்டுகளில் அடுத்த பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருப்பதால் அச்சத்துடன் உள்ளனர். ஆகவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X