தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை, கோடை மழை வழக்கத்தைவிட அதிகரிப்பு!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த 2019, 2020 ல் வடகிழக்கு பருவமழை, கோடை மழை வழக்கத்தைவிட அதிகளவில் பெய்துள்ளது. குறிப்பாக 2021 ஜனவரியில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது. கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் முன்கூட்டியே முதல்போக சாகுபடிபணிகளை தொடங்கியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டடத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி 1.33 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி

ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த 2019, 2020 ல் வடகிழக்கு பருவமழை, கோடை மழை வழக்கத்தைவிட அதிகளவில் பெய்துள்ளது. குறிப்பாக 2021 ஜனவரியில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது. கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் முன்கூட்டியே முதல்போக சாகுபடிபணிகளை தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டடத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி 1.33 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். சிறுதானியங்கள் 25ஆயிரம் ஏக்கர், பயறுவகைகள் 10ஆயிரம் ஏக்கர், எண்ணெய்வித்து 6 ஆயிரம் ஏக்கர் பயிரிடுகின்றனர்.

மழை அதிகம்

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை ஆண்டிற்கு சராசரியாக 827 மி.மீ., பெய்யும். 2016 ல் 348.64மி.மீ., 2017 ல் 599.94, 2018 ல் 663.67 என குறைந்த அளவே மழைபெய்தது. 2019 ல் பருவமழை தெ.மே., 139 மி.மி., வ.கி., 583 மி.மீ., என மொத்தம் 913 மி.மீ., மற்றும் 2020 ல் தெ.மே., 177.91 மி.மீ., வ.கி., 583 மி.மீ., என மொத்தம் 845.25 மி.மீ., மழை பெய்துள்ளது.மேலும் ஜனவரியில் 48.5 மி.மீ., மழை பெய்வது வழக்கம்.

ஆனால் இவ்வாண்டு ஜனவரியில் 15 நாட்களில் மட்டும் 247 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் 1694 விவசாயக் கண்மாய்களில் 70 சதவீதம் நிரம்பியுள்ளன.

சேதம்

ஜனவரியில் எதிர்பாராத மழையால் அறுவடைநேரத்தில் 1.5 ஏக்கர் வரை நெற்பயிர்கள், மிளகாய், பருத்தி, சிறுதாணியங்கள், எண்ணெய்வித்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பணி துவக்கம்தற்போது கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் ஆடிப்பாட்டத்தில் குறுகியகால எண்ணெய்வித்துகளையும், சிலர் முதல்போக சாகுபடிக்காக முன்கூட்டியே செப்டம்பரில் நெற்பயிர்சாகுபடி செய்வதற்காக வயலை பரம்படித்து, உழுது தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X