பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் கொரோனா தொற்று குறைவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றாலும், சி.வி.ராமன் நகர் வார்டில் தொற்று அதிகரிப்பது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலம்இந்த ஒரே வார்டில், ஆறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பெங்களூரில், படிப்படியாக கொரோனா குறைந்ததால், மக்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்; ஊரடங்கு

பெங்களூரு-பெங்களூரில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றாலும், சி.வி.ராமன் நகர் வார்டில் தொற்று அதிகரிப்பது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலம்இந்த ஒரே வார்டில், ஆறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பெங்களூரில், படிப்படியாக கொரோனா குறைந்ததால், மக்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்; ஊரடங்கு கெடுபிடிகளும் தளர்த்தப்படுகிறது. மக்களின் வாழ்க்கை, வர்த்தக நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.மாநகராட்சியின் மற்ற வார்டுகளில், தொற்று குறைந்துள்ளது என்றாலும், சி.வி.ராமன்நகர் வார்டில் தொற்று அதிகரிக்கிறது. இந்த வார்டில் மட்டும், ஆறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கு முன் பெங்களூரில், கொரோனா மூலை, மூலையிலும் பரவி உச்சகட்டத்தில் இருந்த போது, ஒரு வீடு, வர்த்தக இடம் அல்லது அடுக்கு மாடி கட்டடங்களில், 10க்கும் மேற்பட்டோருக்கு, தொற்று ஏற்பட்டால், அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக்கப்பட்டது.தற்போது ஒரு இடத்தில் மூன்று முதல் ஐந்து பேருக்கு தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.சி.வி.ராமன்நகர் வார்டில், கொரோனா நோயாளிகள் எங்கெங்கு சென்றனர் என்ற தகவல் கேட்டறிந்த போது, கக்கதாசபுரா மார்க்கெட், திப்பசந்திரா மார்க்கெட்டுக்கு மட்டும் சென்று வந்ததாக கூறினர். எனவே, மார்க்கெட் வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.பரிசோதனை இதனால் மார்க்கெட் வியாபாரிகள், சுற்றுப்புற கடைகாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்காலிக முகாம் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா நோயாளிகள் வீட்டின் சுற்றுப்பகுதியில், 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவரும், பரிசோதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X