கண்மாய் கருவேல மரங்களை  அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய் கருவேல மரங்களை  அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜூலை 22, 2021
Share
அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் முதல் லாந்தை வரை பெரியகண்மாய் கரைப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் லாந்தை, அச்சுந்தன்வயல், சந்தைவழியான் கோயில் ஆகிய இடங்களில் பெரியகண்மாய்

அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் முதல் லாந்தை வரை பெரியகண்மாய் கரைப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் லாந்தை, அச்சுந்தன்வயல், சந்தைவழியான் கோயில் ஆகிய இடங்களில் பெரியகண்மாய் கரைப்பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. விவசாயப்பணிகளுக்காக டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றுவர விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

பொதுப்பணித்துறையி னர் கூறுகையில், 'தென்கழுங்கு மதகு பகுதியில் சாகுபடிபணிக்கு சென்றுவர கண்மாய் கரைவழியில் இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், வருவாய்துறை மூலம் கணக்கீட்டு அகற்ற வேண்டும் என ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்துள்ளோம். மழைக்காலத்திற்குள்ளாக அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X