பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டைமடியில் மீன்பிடிப்பு : 13 விசைப்படகிற்கு தடை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த 13 விசைப்படகிற்கு மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க அரசு தடை விதித்தது. ஆனால் ஜூலை 17ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 13 விசைபடகில் இரட்டைமடியில் மீன் பிடித்ததாக மீன்துறை அதிகாரியிடம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த 13 விசைப்படகிற்கு மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க அரசு தடை விதித்தது. ஆனால் ஜூலை 17ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 13 விசைபடகில் இரட்டைமடியில் மீன் பிடித்ததாக மீன்துறை அதிகாரியிடம் மீனவர் சங்க நிர்வாகிகள் புகார் செய்தனர். அதன்படி 13 படகிற்கு நேற்று மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன், மானிய டீசலை ரத்து செய்தனர்.

ஆனால் மீன்வளத்துறை தடையை மீறி இரு படகுகள் மீன்பிடிக்க சென்றதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த விசைப்படகுகளில் இரட்டைமடி பதுக்கி உள்ளனரா என மீன்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இரட்டைமடிகள் ஏதும் சிக்கவில்லை என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X