பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் ஆபத்து குளியல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி கடலின் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க வேண்டும்.ராமேஸ்வரத்தில் இருந்து 24 கி.மீ., துாரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இரு கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால், ஆர்ப்பரிக்கும் கடல் அலை, அழகிய கடற்கரை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இக்கடல் அலை, கரையில் நிற்கும் மனிதர்களை கடலுக்குள் இழுத்து செல்லும்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி கடலின் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து 24 கி.மீ., துாரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இரு கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால், ஆர்ப்பரிக்கும் கடல் அலை, அழகிய கடற்கரை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இக்கடல் அலை, கரையில் நிற்கும் மனிதர்களை கடலுக்குள் இழுத்து செல்லும் தன்மை கொண்டது என்பதால், அரிச்சல்முனை என பெயரிட்டனர்.

இதன் விபரீதத்தை உணராத சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் கடலில் உற்சாகமாக குளித்து விளையாடுகின்றனர். இதற்கு போலீசார் எச்சரித்தும், சுற்றுலா பயணிகள் பொருட்படுத்தாமல் வேறு பகுதிக்கு சென்று குளிக்கின்றனர். எனவே போலீசாருடன், தன்னார்வலர்கள் இணைந்து கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X