பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல தண்ணீர் தீவில் மயில்களுக்கு இரை; வனத்துறை நடவடிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வாலிநோக்கம் : வாலிநோக்கம் அருகே முந்தல் கடற்கரையில் பார்க்கும் தொலைவில் கண்களுக்கு எழிலாக நல்ல தண்ணீர் தீவு உள்ளது. மன்னார் வளைகுடாவில் மண்டபம் சரகத்தில் 7, கீழக்கரை சரகத்தில் 7, சாயல்குடி, வேம்பார் சரகத்தில் 7 எனமொத்தம் 21 தீவுகள் உள்ளன. முந்தல் கடற்கரையோரம் அமைந்துள்ள நல்ல தண்ணீர் தீவு 101 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின்

வாலிநோக்கம் : வாலிநோக்கம் அருகே முந்தல் கடற்கரையில் பார்க்கும் தொலைவில் கண்களுக்கு எழிலாக நல்ல தண்ணீர் தீவு உள்ளது. மன்னார் வளைகுடாவில் மண்டபம் சரகத்தில் 7, கீழக்கரை சரகத்தில் 7, சாயல்குடி, வேம்பார் சரகத்தில் 7 எனமொத்தம் 21 தீவுகள் உள்ளன. முந்தல் கடற்கரையோரம் அமைந்துள்ள நல்ல தண்ணீர் தீவு 101 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வனசரக அலுவலர், வனக்காப்பாளர், வனவர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூலம் இத்தீவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நல்ல தண்ணீர் தீவில் 200க்கும் அதிகமான மயில்கள் வாழ்ந்து வருகிறது.

வனத்துறையினர் கூறிய தாவது; இரைக்காக அல்லல்படும் மயில்களை காப்பாற்றுவதற்காக, மீனவர்கள், தன்னார்வலர்களிடமிருந்து அரிசி, பொட்டுக்கடலை, தானியங்களைபெற்று, இரையாக போட்டு வருகிறோம். தீவில் உள்ள 3 அடி ஆழம் கொண்ட சிறு தொட்டிக்கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் உள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X