எடியூரப்பா மாற்றமா; உன்னிப்பாக கவனிக்கும் காங்.,| Dinamalar

எடியூரப்பா மாற்றமா; உன்னிப்பாக கவனிக்கும் காங்.,

Added : ஜூலை 22, 2021
Share
பெங்களூரு-முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுகிறாரா என்பதை, காங்கிரஸ் உன்னிப்பாக கவனிக்கிறது. அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில், லிங்காயத் தலைவரை அமர்த்த முயற்சி நடக்கிறது.கர்நாடக முதல்வரான எடியூரப்பாவை, வயதை காரணம் காண்பித்து, அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்த, திரைமறைவில் ஏற்பாடுகள் நடப்பதாக, தகவல் வெளியானது. இதனால்

பெங்களூரு-முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுகிறாரா என்பதை, காங்கிரஸ் உன்னிப்பாக கவனிக்கிறது. அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில், லிங்காயத் தலைவரை அமர்த்த முயற்சி நடக்கிறது.கர்நாடக முதல்வரான எடியூரப்பாவை, வயதை காரணம் காண்பித்து, அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்த, திரைமறைவில் ஏற்பாடுகள் நடப்பதாக, தகவல் வெளியானது. இதனால் மாநிலத்தில், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பின்விளைவுகள் பிரபலமான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவை, முதல்வர் பதவியிலிருந்து மாற்றுவது, அவ்வளவு எளிதல்ல.இதன் பின் விளைவுகளை, பா.ஜ., மேலிடம் சந்திக்க வேண்டி வரும் என, காங்கிரசாரே கூறுகின்றனர்.ஒருவேளை எந்த நெருக்கடிக்கும் பணியாமல், பா.ஜ., மேலிடம், எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து மாற்றினால், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில், லிங்காயத் தலைவரை அமர்த்த, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆதரவு கோஷ்டி, திரைமறைவில் முயற்சியை துவங்கியுள்ளது.காங்., திட்டம் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிபோனால், லிங்காயத் சமுதாயத்தினர் அதிருப்தியடைவர். இந்த சூழ்நிலையை, தனக்கு லாபகரமாக பயன்படுத்த, காங்கிரஸ் நினைக்கிறது. கட்சிக்கு லாபம் கிடைக்க வேண்டுமானால், லிங்காயத் தலைவர் ஒருவரை, மாநில தலைவர் பதவியில் நியமிக்கும்படி, சித்தராமையா கோஷ்டியினர், காங்., மேலிடத்துக்கு ஆலோசனை கூற வாய்ப்புள்ளது.சித்து கோஷ்டிஇதன் மூலம் ஒரே கல்லில், இரண்டு மாங்காய் அடிப்பது, சித்து கோஷ்டியின் நோக்கமாகும்.ஒவ்வொரு விஷயத்திலும், தன்னை எதிர்க்கும் சிவகுமாரை, மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றுவதுடன், அந்த இடத்துக்கு, தங்களுக்கு நெருக்கமான, லிங்காயத் தலைவரை கொண்டு வருவது, சித்தராமையாவின் எண்ணம்.புத்துணர்ச்சி கர்நாடக காங்., தலைவராக, ஒக்கலிகர் சமுதாயத்தின் சிவகுமார் நியமிக்கப்பட்ட பின், கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது உண்மை தான் என்றாலும், மொத்த ஒக்கலிகர்களையும், கட்சி பக்கம் திருப்ப முடியாது. விலகுவர் ஏனென்றால் கிராமப்புறத்தில், ஒக்கலிகர் சமுதாயத்தினர், ம.ஜ.த.,வுக்கு ஆதரவாகவும், நகர்ப்பகுதிகளில் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.முதல்வர் பதவியிலிருந்து, எடியூரப்பா நீக்கப்பட்டால், பெருமளவில் லிங்காயத் சமுதாயத்தினர், பா.ஜ.,விலிருந்து விலகக்கூடும். அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக, லிங்காயத்து சமுதாயத்தினர் இருந்தால், அதிக பயனடையலாம்.இதை மனதில் கொண்டே, காங்., மூத்த தலைவர் எம்.பி.பாட்டீல், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக நிற்பதன் மூலம், லிங்காயத் சமுதாயத்தினர் நம்பிக்கையை பெறவும், வீர சைவ - லிங்காயத்து சமுதாயத்தை பிரிக்க முயற்சித்த அவப்பெயரை, போக்கவும் முயற்சிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X