பொது செய்தி

இந்தியா

கப்பன் பூங்காவில் மருத்துவ மரக்கன்றுகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரின் இதயமாக கருதப்படும் கப்பன் பூங்காவில், பொது மக்களின் ஆரோக்கியத்துக்காக, மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நட்டு, 'ஆயுர்வேத வனம்'அமைக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.கர்நாடக தோட்டக்கலைத்துறை, துணை இயக்குனர் பாலகிருஷ்ணா கூறியதாவது:தினமும் காலை, மாலையில் ஆயிரக்கணக்கானோர், நடைபயிற்சிக்காக கப்பன் பூங்காவுக்கு வருகின்றனர். இவர்களின்

பெங்களூரு-பெங்களூரின் இதயமாக கருதப்படும் கப்பன் பூங்காவில், பொது மக்களின் ஆரோக்கியத்துக்காக, மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நட்டு, 'ஆயுர்வேத வனம்'அமைக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.கர்நாடக தோட்டக்கலைத்துறை, துணை இயக்குனர் பாலகிருஷ்ணா கூறியதாவது:தினமும் காலை, மாலையில் ஆயிரக்கணக்கானோர், நடைபயிற்சிக்காக கப்பன் பூங்காவுக்கு வருகின்றனர். இவர்களின் ஆரோக்கியத்துக்காக, மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடப்படும். குறிப்பாக மூச்சுத்திணறல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய, மரக்கன்றுகள் நடப்படும்.இந்த இடத்தில், மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நட்டு, ஆயுர்வேத வனம் உருவாக்கப்படும். இதனால் நடை பயிற்சியாளர்களுக்கு, சுத்தமான காற்று கிடைக்கும். ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல அபிவிருத்தி பணிகள் முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத்தில், ஆயுர்வேத வனம் அமைக்கும் பணிகள் துவங்கும்.கப்பன் பூங்காவின், பால பவன் எதிரில், 13 லட்சம் ரூபாய் செலவில், ஆயுர்வேத வனம் அமைக்க, இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசனம் மூலம், வனத்துக்கு தண்ணீர் வசதி செய்யப்படும். சுற்றுச்சூழல் வல்லுனர் எல்லப்ப ரெட்டி வழி காட்டுதலின்படி, இந்த வனம் அமைக்கப்படும். வனத்தில் மருத்துவ குணம் கொண்ட, மரக்கன்றுகளுடன், பல்வேறு வகையான பழங்கள், பூச்செடிகளும் கூட நடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X