பொது செய்தி

இந்தியா

காங்., மூத்த தலைவர் கவலைக்கிடம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மங்களூரு-காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசின், 80, உடல்நிலை மோசமாக உள்ளது. கட்சியின் மேலிட தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர், ஆஸ்கர் பெர்னான்டஸ் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரது நலம் விசாரித்தனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்ன்டஸ், ஜூலை 19 காலை, யோகா செய்யும் போது, தவறி விழுந்தார். அன்று மாலை டயாலிசிஸ் செய்வதற்காக, மங்களூரின் தனியார் மருத்துவமனைக்கு

மங்களூரு-காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசின், 80, உடல்நிலை மோசமாக உள்ளது. கட்சியின் மேலிட தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர், ஆஸ்கர் பெர்னான்டஸ் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரது நலம் விசாரித்தனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்ன்டஸ், ஜூலை 19 காலை, யோகா செய்யும் போது, தவறி விழுந்தார். அன்று மாலை டயாலிசிஸ் செய்வதற்காக, மங்களூரின் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவரை பரிசோதித்த போது, தலையின் உட்பகுதியில் அடிபட்டுள்ளது. மூளையில் ரத்தம் கட்டியுள்ளது தெரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் அவரின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.காங்., மேலிட தலைவர்கள் சோனியா, ராகுல் நேற்று காலை, தொலைபேசியில், ஆஸ்கர் பெர்னாண்டஸ் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்து, ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X