பொது செய்தி

இந்தியா

மாநிலத்தில் எழுந்துள்ள குழப்பம் சுபமாக முடியும்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உத்தரகன்னடா-"மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள குழப்பம், விரைவில் சுபமாக முடியும்," என, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் கூறினார்.உத்தர கன்னடா சிர்சியின், நேரலகட்டே கிராமத்தில், அவர் நேற்று கூறியதாவது:ஜனநாயக நடைமுறையில், ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இதற்கு மடாதிபதிகள் விதிவிலக்கல்ல. தர்மசங்கடம்வேட்டைக்காரனிடமிருந்து, தப்பி வந்த

உத்தரகன்னடா-"மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள குழப்பம், விரைவில் சுபமாக முடியும்," என, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் கூறினார்.உத்தர கன்னடா சிர்சியின், நேரலகட்டே கிராமத்தில், அவர் நேற்று கூறியதாவது:ஜனநாயக நடைமுறையில், ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இதற்கு மடாதிபதிகள் விதிவிலக்கல்ல. தர்மசங்கடம்வேட்டைக்காரனிடமிருந்து, தப்பி வந்த மான், சன்னியாசி ஒருவரை கடந்து ஓடி போனது. மான் எந்த பக்கம் சென்றது என, வேட்டைக்காரன் கேட்ட போது, சன்னியாசி தர்மசங்கடத்தில் சிக்கினார்.மான் ஓடிய திசையை கூறினால், அதன் இறப்புக்கு காரணமாக நேரிடும். வேறு திசையை காண்பித்தால், பொய் சொன்னதாக ஆகிவிடும். இது போல, அரசியலை பற்றி கூறவும் தர்மசங்கடமாக இருக்கிறது. ஆனால், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, விரைவில் சுபமாக முடியும்.நவம்பர் முதல் சங்கிராந்தி இடையிலான நாட்களில், தேசிய அளவில் அரசியல் பரபரப்புகள் நிகழும். ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து, கொரோனா தொந்தரவு அதிகரிக்கும். நோயால் மக்கள் சாகமாட்டார்கள். நோய் பயத்தால், இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் தைரியத்தை கைவிடக்கூடாது.ஜலப்பிரளயம் மழை, காற்று அதிகரிக்கும். ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, ஜலப்பிரளயம் ஏற்படும். நடப்பாண்டு பஞ்சபூதங்களால், அசம்பாவிதங்கள் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X