டிவி கேபிள்களால் பொதுமக்கள் அச்சம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் குடியிருப்பு பகுதிகளில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தொங்கும், பலவிதமான தொலை தொடர்பு மற்றும் 'டிவி' கேபிள்களால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.பெங்களூரின் சேஷாத்ரிபுரம், மல்லேஸ்வரம், சஞ்ஜெய் நகர், உல்சூர் பகுதிகளில் மின்சார கேபிள்கள், மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கேபிள்களால், மக்கள்

பெங்களூரு-பெங்களூரில் குடியிருப்பு பகுதிகளில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தொங்கும், பலவிதமான தொலை தொடர்பு மற்றும் 'டிவி' கேபிள்களால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.பெங்களூரின் சேஷாத்ரிபுரம், மல்லேஸ்வரம், சஞ்ஜெய் நகர், உல்சூர் பகுதிகளில் மின்சார கேபிள்கள், மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கேபிள்களால், மக்கள் நடைபாதையில் நடந்து செல்லதற்கும் வழியில்லாமல் அச்சத்தில் ரோட்டில் இறங்கி செல்ல வேண்டிஉள்ளது.சேஷாத்ரிபுரம் மக்கள் கூறியதாவது:மரக்கிளைகளில் ஏராளமான கேபிள்களை மாட்டி வைத்துள்ளனர். இதில் எதில் மின்சாரம் சென்றுகொண்டிருக்கிறது, எது 'டிவி' இணைப்பு கேபிள் என்பதும் தெரிவதில்லை.மரக்கிளைகள் காற்றில் அசையும் போதெல்லாமல், கேபிள் ஒயர்கள் மிகவும் கீழ் வந்து செல்கிறது. சில நேரங்களில் மாட்டியிருக்கும் ஒயர்கள் கீழே விழுந்து கிடக்கிறது.பெங்களூரு மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட போது, சில கேபிள்களை நடைபாதை அருகே இருக்கும் மரங்களில் தொங்க விட்டனர்.இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் யாரும் இதை அப்புறப்படுத்த வரவில்லை. பல பகுதிகளின் நடைபாதையிலும் இதுதான் நிலையாக உள்ளது. மக்கள் இதனால் நடைபாதையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். இவ்வாறு கூறினர்.பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயன்படுத்தப்படாத கேபிள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அகற்றப்படும்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X