பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மாற்றம் வர போகுதாம்!மகா நகர், ஜே.சி. ரோட்டில் அரசு பங்களாவில் குடியிருக்கும் தொழிலாளர் மினிஸ்டர், தனது, பக்கத்து வீட்டுல இருக்கும் மினிஸ்டருக்கு போன் போட்டு அழைச்சிருக்காரு.அவர் வருவாரு வருவாருன்னு முக்கால் மணி நேரம் காத்திருந்தாரு. அதுக்கப்புறம், ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்காங்க.ஒருத்தோடு ஒருத்தர் சீரியசா பேசிக்கிட்டாங்க. ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட போகிற மாதிரி

மாற்றம் வர போகுதாம்!மகா நகர், ஜே.சி. ரோட்டில் அரசு பங்களாவில் குடியிருக்கும் தொழிலாளர் மினிஸ்டர், தனது, பக்கத்து வீட்டுல இருக்கும் மினிஸ்டருக்கு போன் போட்டு அழைச்சிருக்காரு.அவர் வருவாரு வருவாருன்னு முக்கால் மணி நேரம் காத்திருந்தாரு. அதுக்கப்புறம், ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்காங்க.ஒருத்தோடு ஒருத்தர் சீரியசா பேசிக்கிட்டாங்க. ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட போகிற மாதிரி ரெண்டு மந்திரிங்களோட முகத்திலுமே ஏற்றம் இறக்கமா தோற்றம் தொங்கிப்போய் இருந்ததாம். அது என்ன ரகசியமோ.முதல்வர் மாற்றம் ஏற்பட்டால், தங்களோட பதவிக்கும் ஆபத்து இருப்பதாக சில மந்திரிங்க கூடி கூடி பேசிக்கிறாங்க.மந்திரியா நீடிக்க தகுதி, திறமை முக்கியமே இல்ல. சிக்கலில் மாட்டாமல், எல்லாம் மேலிடச் செயல்னு ஒத்துப் போகனும். வாய் கொடுத்து வாங்கி கட்டிக்க கூடாதுன்னு இருக்காங்களாம்.தலை நிமிருமா கம்பீரம்!'மாஜி' மந்திரி ஆபாச 'சிடி' வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரப்போகுது. சிறப்பு புலனாய்வு ஆபிசருங்க விசாரிச்ச விபரங்களை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட்டாங்க. சம்பந்தபட்டவருக்கு, என்ன நடக்க போகுதோன்னு, 104 டிகிரி வெப்பத்தோடு திக் திக் உதறல் ஏற்பட்டிருக்குதாம்.எவ்ளவோ சமாளிக்கிற இவருக்கு, நடுக்கம் நாட்டியம் போட வெச்சிருக்காம். பலான வீடியோவுல இருக்கிற பெண் யாருன்னே தெரியாதுன்னு சொன்னவரு, அந்தர் பல்டி போட்டாரு.ரெண்டு பேருமே ஒத்துப்போய் தான் ஒண்ணா இருந்தோம்னு வாய்ப்பாடு சொன்னாரு. மந்திரி பதவியை இழந்தவரு, எம்.எல்.ஏ., பதவிக்கும் ராஜினாமா செய்யப்போறதா சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லி பார்த்தாரு. அடுத்த வாரம் கோர்ட்டு முடிவுக்கு பிறகு தான் இவரோட கம்பீரம் என்ன ஆகப்போகுதோ?பிளான் ஒர்க் அவுட் ஆகல!தேசிய தலைநகர் டெல்லியில் கைக்கார, 'மாஜி' சி.எம்., நேஷனல் மாஜி தலைவரை தனியா சந்திக்க ஆசைப்பட்டாரு. ஆனால் பிளான் ஒர்க் அவுட் ஆகல.அவர் தனியா சந்திக்க விரும்பல. பிரச்னைக்குரிய மாநில தலைவர் பேர்ல நெகடிவ்வான கதைகளை கோத்து விட மாஜி சி.எம்., நேரம் எதிர்ப்பார்த்தாரு.திகார் ஜெயிலுக்கு போக வேண்டியவருக்கு சி.எம்., போஸ்ட்டான்னு கெட்ட அபிப்பிராயங்களையும் சொல்ல இருந்தாரு.ஆனாலும், மாநில கைக் கார தலைவரையும் ஒண்ணாவே சந்திச்சதால், கட்சி அட்வைஸ் மட்டுமே தலையாட்ட வைத்திருக்கு.பூக்கார குட்டையில் குழப்பமோ குழப்பம் தள்ளாடுவதால், இதனை சரியா பயன்படுத்த கை காரங்க பாலிடிக்ஸ் நடத்த போறாங்களாம். குத்தி விட்டு குளிர் காயப்போறாங்களாம்.ஆட்சி போனது ஏன்?தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட தால் தான் புல்லுக்கட்டு - கைக்காரர்களோட கூட்டாட்சி கலைந்து போனதாக ரொம்போ லேட்டா விஷயம் வெளியே வந்திருக்கு.பத்திரிகையாளர்கள், சென்ட்ரல் மினிஸ்டர்கள் போன்களையும் ஒட்டு கேட்டாங்களாம். நம்ம ஸ்டேட்டோட கூட்டணி ஆட்சி கவிழவும் ஒட்டுக் கேட்பு வேலை தான் முக்கிய பங்கா இருந்திருக்காம்னு வெப் சைட் தகவல் தெரிவிச்சிருக்கு.இதோட வித்தைக்கு 17 பேரை கை காரங்க, புல்லு கட்டுக்காரங்க கை நழுவி போனாங்க. கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பூ மலர்ந்திடுச்சு.பூ காரங்க, மனித உரிமை மீறலை செய்திருக்காங்க. இது பூ காரங்களோட கீழ் மட்ட அரசியல்னு பூ கார மாஜி சி.எம்., மோசமாவே வார்த்தைகளால் விலாசி இருக்காரு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X