பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டுமென போராட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தட்சிணகன்னடா,-கர்நாடக சமன்வயா வேதிக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சங்கத்தினர், பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.தட்சிணகன்னடா மாவட்டம் உப்பினங்காடியில், கர்நாடகக சமன்வயா வேதிக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சங்கத்தினர், நகர அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.சங்க தலைவர் மொய்தீன் குட்டி கூறியதாவது:மாநில அரசு அனைத்து துறைகளிலும் தளர்வை

தட்சிணகன்னடா,-கர்நாடக சமன்வயா வேதிக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சங்கத்தினர், பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.தட்சிணகன்னடா மாவட்டம் உப்பினங்காடியில், கர்நாடகக சமன்வயா வேதிக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சங்கத்தினர், நகர அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.சங்க தலைவர் மொய்தீன் குட்டி கூறியதாவது:மாநில அரசு அனைத்து துறைகளிலும் தளர்வை அறிவித்து விட்டது. ஆனால், கல்வித்துறையில் மட்டும் இவ்வாறு தாமதப்படுத்துவது அதிருப்தியாக உள்ளது.மாநில தொழில்நுட்ப குழுவினர் பள்ளிகளை திறப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளை திறக்காமல் உள்ளது.பள்ளி திறக்கப்படுவது தாமதவதால், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. சில மாணவர்கள் பகுதி நேர பணிக்கு சென்று தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.சில குழந்தைகள் உணவுக்கும் பிறரிடம் உதவி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர். பள்ளிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விரைவில் திறக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X