எம்.எல்.ஏ., உதவியாளர் என கூறி மோசடி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷின் அந்தரங்க உதவியாளர் என கூறி, பா.ஜ., எம்.எல்.ஏ.,விடம், 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரகன்னடா கார்வார் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரூபாலி நாயக். ஜூலை 1ல் இவரை மொபைலில் தொடர்பு கொண்ட நபர், தன்னை கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷின் அந்தரங்க உதவியாளர் என, அறிமுகம் செய்து கொண்டார். 'மகேஷூக்கு அவசரமாக, 50 ஆயிரம் ரூபாய்

பெங்களூரு-கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷின் அந்தரங்க உதவியாளர் என கூறி, பா.ஜ., எம்.எல்.ஏ.,விடம், 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரகன்னடா கார்வார் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரூபாலி நாயக். ஜூலை 1ல் இவரை மொபைலில் தொடர்பு கொண்ட நபர், தன்னை கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷின் அந்தரங்க உதவியாளர் என, அறிமுகம் செய்து கொண்டார். 'மகேஷூக்கு அவசரமாக, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. உங்களிடம் கேட்கும்படி கூறினார்' என்றார். இதை நம்பிய ரூபாலி நாயக், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.சில நாட்களுக்கு முன், ரூபாலி நாயக் பெங்களூருக்கு சென்றிருந்த போது, விதான் சவுதாவில் எம்.எல்.ஏ., மகேஷை நேரில் சந்தித்தார். 50 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரும்படி கேட்டார். அதிர்ச்சியடைந்த மகேஷ், தான் பணம் வாங்கவில்லை என்றார். அவரிடம் ரூபாலி நடந்ததை விவரித்தார்.அப்போது அங்கேயே இருந்த, மகேஷின் அந்தரங்க உதவியாளர், நான் பணம் எதுவும் கேட்கவில்லை என கூறினார். எம்.எல்.ஏ., மகேஷின் பெயரை, தவறாக பயன்படுத்தி மோசடி நடந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மகேஷின் அந்தரங்க உதவியாளர், கொள்ளேகால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய போலீசார், மொபைல் எண், வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து, ராம்நகர் கனகபுராவின், தொட்டமளலவாடி கிராமத்தின் சச்சின், 23, என்பவரை நேற்று முன் தினம் கைது செய்தனர். இவர், எம்.எல்.ஏ., ரூபாலி மட்டுமின்றி, பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சி.டி.ரவி உட்பட, பலரை தொடர்பு கொண்டு, எம்.எல்.ஏ., மகேஷ் பெயரில், மோசடி செய்திருப்பது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X