தமிழ்நாடு

கூடுதலாக 10 ஆயிரம் மெ.டன் நெல்கொள்முதல் செய்ய வாய்ப்பு!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் கூடுதலாக 10 ஆயிரம் மெ.டன் நெல்கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி நவீன அரிசி ஆலை, கோடவுன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி விவசாய மாவட்டம் என்பதால் நெல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழையால் அணைகள், நீர் நிலைகளில் போதிய நீர் கையிருப்பு இருந்ததால் கூடலுாரில்

தேனி : தேனி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் கூடுதலாக 10 ஆயிரம் மெ.டன் நெல்கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி நவீன அரிசி ஆலை, கோடவுன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி விவசாய மாவட்டம் என்பதால் நெல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழையால் அணைகள், நீர் நிலைகளில் போதிய நீர் கையிருப்பு இருந்ததால் கூடலுாரில் துவங்கி கெங்குவார்பட்டி வரை நெல் சாகுபடி அமோகமாக இருந்தது. நெல் கொள்முதல் பருவம் 2020 அக்., 30 ல் துவங்கி 2021 செப். நிறைவு பெறும். மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் நுகர்பொருள் வாணிப கழகம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

கூடுதல் கொள்முதல்

மாவட்டத்தில் கூடலுார், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், உப்பார்பட்டி, மேல்மங்கலம், கீழவடகரை, கெங்குவார்பட்டி என 11 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு கொள்முதல் செய்தனர். இதில் குவிண்டால் (100 கிலோ) சாதாரண ரகம் ரூ.1918, சன்னரகம் ரூ. 1958 கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் அக். 1 முதல் நேற்று வரை 21ஆயிரத்து 380 டன் கொள்முதல் செய்துள்ளனர். செப்டம்பர் வரை 3 ஆயிரம் டன் கொள்முதலுக்கு வாய்ப்பு உள்ளதால் 24,380 டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு 13,734 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10 ஆயிரம் டன் கூடுதல் கொள்முதல் ஆகும் வாய்ப்புள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் பணம் பட்டுவாடா ஓரிரு நாட்களில் வழங்கப்படுகிறது.நவீன அரிசி ஆலை தேவைகொள்முதல் செய்த மூடைகள் 10 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் மதுரை, திருச்சி மாவட்ட அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

போக்குவரத்தில் தாமதமானால் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும். எனவே தங்கள் நலன்கருதிஒரே இடத்தில் 20 ஆயிரம் நெல்மூடைகள் பாதுகாக்கும் கோடவுன்கள், நவீன அரிசி ஆலைகள் மாவட்டத்தில் அமைக்க விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X