பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கை விலை கிலோ ரூ.10

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, சாலைபுதூரில் செடிமுருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவு காரணமாக முருங்கை விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 65 க்கு விற்றது. இந்த

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, சாலைபுதூரில் செடிமுருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவு காரணமாக முருங்கை விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 65 க்கு விற்றது. இந்த வாரம் உள்ளூர் பகுதிகளில் இருந்து வரத்து அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக விலை குறையத் தொடங்கியது.ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 28 க்கு விற்றது. நேற்று கிலோவுக்கு ரூ.18 குறைந்து ரூ.10 க்கு விற்பனையானது. ஒரே வாரத்தில் முருங்கை விலை சரிவை கண்டு இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X