தமிழ்நாடு

'கொடை'யில் வேணும் கூடுதல் சுற்றுலா தலங்கள்; நெரிசல் குறையும்; மகிழ்ச்சி நிறையும்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் பகுதியில் கூடுதல் சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு மேம்படுத்தினால், சீசன் நேரத்தில் நெரிசல் குறையும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏரி, தோட்டக்கலைத்துறையின் பூங்காக்கள், பேரிஜம், டால்பின் நோஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வரும் பயணிகள் பொழுது போக்க இவை
 'கொடை'யில் வேணும் கூடுதல் சுற்றுலா தலங்கள்; நெரிசல் குறையும்; மகிழ்ச்சி நிறையும்

கொடைக்கானல் : கொடைக்கானல் பகுதியில் கூடுதல் சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு மேம்படுத்தினால், சீசன் நேரத்தில் நெரிசல் குறையும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏரி, தோட்டக்கலைத்துறையின் பூங்காக்கள், பேரிஜம், டால்பின் நோஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வரும் பயணிகள் பொழுது போக்க இவை பெரிதும் உதவுகின்றன.இதற்காக வரும் பயணிகளால் நிரம்பி மலை நகரே சீசன் நேரத்தில் திக்குமுக்காடும்.

முன்பு மலைப்பகுதியை சுற்றியுள்ள பிறபகுதிகளை கண்டறிந்து சுற்றுலாத்தலங்களாக உருவாக்கினால் நகரில் நெரிசல் தவிர்க்கப்படும் என ஆலோசிக்கப்பட்டது.இதனடிப்படையில் மலைப் பகுதியில் புதிய சுற்றுலா தலங்களின் தேடல் துவங்கியது. கிராமிய சுற்றுலா, நறுமண சுற்றுலா தலம், ஆன்மிகம், டிரக்கிங், சூழல் சுற்றுலா என மடைமாற்றும் யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

தொலைதூர புதிய தலங்களில் கட்டமைப்பு, ரோடு வசதி இல்லாதது, பாதுகாப்பு குறைபாடு இருந்தாலும் பயணிகள் போய் வரத்தான் செய்கின்றனர்.


புதிய சுற்றுலா தலங்கள்

மேல் மலைப்பகுதியில் புலவிச்சாறு அருவி, பள்ளங்கி கொட்டி வரை அருவி, வில்பட்டி பகுதியில் புலியூர் புல்வெளி, ஓராவி, ஐந்து வீடு அருவி, தடியன்குடிசை நறுமண சுற்றுலா தலம், புல்லாவெளி அருவி, தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், மேல்மலை பண்ணைத் தோட்டங்கள், கூக்கால் ஏரி, (ஹெலிகாப்டர் ) வான் சுற்றுலா, ரோப் கார், வானியியல் சுற்றுலா, கொய்மலர் சாகுபடி, ஆன்மிகம் சார்ந்த அரசன்கொடை கதவு மலை குகைக் கோயில், தாண்டிக்குடி, பூம்பாறை, அடுக்கம் பகுதியில் பழங்கால நினைவு சின்னங்கள், எதிரொலிப்பாறை, அணை காட்சி என கொடைக்கானலைச் சுற்றி கூடுதலாக பல புதிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் சிறப்பு வாய்ந்தவை. இவை சுறறுலா நடைமுறைக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது பயணிகள் வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பர் என்பதால் நகருக்குள் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கின்றனர். சுற்றுலா தலங்களில் புதுமையை எதிர்பார்க்கும் பயணிகளுக்கு இவை வரப்பிரசாதமாக அமையும்.


சுற்றுலா விரிவடையும்

சமூகஆர்வலர் ரவிக்குமார், கொடைக்கானல்: துவக்கத்தில் அறிமுகப்படுத்திய சுற்றுலாத்தலங்களை மட்டுமே பயணிகள் தற்போதும் காண முடிகிறது. மலைப் பகுதியில் புதிய சுற்றுலா தலங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். அங்கு போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதனால் புறநகர் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். சுற்றுலா விரிவடைந்து பொருளாதாரமும் உயரும்.


நெரிசலை தவிர்க்கலாம்

சுற்றுலா பயணி ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்: கொடைக்கானில் புதுமையான தலங்கள் அறிமுகமானால் மகிழ்ச்சியே. புறநகர் பகுதியில் பல ரம்யமான இடங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தினால் பயணிகளின் வருகை அதிகரிக்கும். சீசன் நேர நெரிசலை தவிர்க்கவும் ஏதுவாக இருக்கும்.


அனுமதி தந்ததும் வளர்ச்சிப்பணி

சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் பிரசித்தி பெற்றவை. புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு நடக்கிறது. சுற்றுலாத் துறைக்கு அனுமதி கிடைத்தவுடன் வளர்ச்சிப் பணி துரிதப்படுத்தப்படும். இதன்மூலம் கொடைக்கானல் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பகுதியாக மாறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X