பொது செய்தி

தமிழ்நாடு

போடியில் ரூ. 23 கோடியில் ரயில்வே மேம்பாலம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேனி : போடி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.23 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைவில் பணி துவங்க உள்ளது.மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலை நீட்சி 49 ல் தேனி மாவட்ட ரோடு, பாலங்கள் தற்போது அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள பாலம், ரோடு 12 மீ. அகலத்தில் குறுகலாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனை 21 மீ. அகல பாலமாக

தேனி : போடி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.23 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைவில் பணி துவங்க உள்ளது.

மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலை நீட்சி 49 ல் தேனி மாவட்ட ரோடு, பாலங்கள் தற்போது அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள பாலம், ரோடு 12 மீ. அகலத்தில் குறுகலாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனை 21 மீ. அகல பாலமாக மாற்றும் பணியும், 500 மீ., நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதே போல் கீழ முத்தணம்பட்டி பாலம், ரோடு அகல்படுத்தும் பணி நடக்கிறது. போடி- குரங்கணி ரோட்டில் இரட்டை வாய்க்கால் எனும் இடத்தில் ரூ.23 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த வாரம் டெண்டர் உறுதியானது. இதில் 12 மீ. அகலம். 800 மீ. நீள மேம்பலாம் அமைக்கப்படும். பணி துவங்கி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X