பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.85 லட்சத்தில் மானிய திட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : 'தோட்டக்கலையில் ரூ. 85 லட்சத்தில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக', உதவி இயக்குனர் நம்பிஷோபனா தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: தக்காளி, கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், மா, கொய்யா ஒட்டுச் செடிகள், திசுவாழை, பப்பாளி, எலுமிச்சை நாற்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அதே போல் டிராகன், அத்திப்பழ கன்றுகளும் விவசாயிகளுக்கு மானியத்தில்

நிலக்கோட்டை : 'தோட்டக்கலையில் ரூ. 85 லட்சத்தில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக', உதவி இயக்குனர் நம்பிஷோபனா தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: தக்காளி, கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், மா, கொய்யா ஒட்டுச் செடிகள், திசுவாழை, பப்பாளி, எலுமிச்சை நாற்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அதே போல் டிராகன், அத்திப்பழ கன்றுகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இது தவிர, சிப்பம் கட்டும் அறை, வெங்காய பட்டறை, பண்ணைக்குட்டை, பசுமை குடிலுக்கு 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100, இதரருக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். நீர்ப்பாசன தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், மோட்டாருக்கு ரூ.15 ஆயிரம், பைப் லைனுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 லட்சத்தில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X