சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி கமிஷனரை கண்டித்து தீக்குளிக்க வந்த ஊழியர் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேனி : தேனி நகராட்சி கமிஷனர் சுப்பையா, தன்னை அவமரியாதை செய்ததாக சுகாதார மேற்பார்வையாளர் நடராஜன் 56, கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.நேற்று மதியம் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் நடராஜன் வந்தார். பாதுகாப்பு போலீசார் கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.அப்போது, 'தேனி நகராட்சி புதிய கமிஷனர் நேற்று

தேனி : தேனி நகராட்சி கமிஷனர் சுப்பையா, தன்னை அவமரியாதை செய்ததாக சுகாதார மேற்பார்வையாளர் நடராஜன் 56, கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று மதியம் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் நடராஜன் வந்தார். பாதுகாப்பு போலீசார் கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.அப்போது, 'தேனி நகராட்சி புதிய கமிஷனர் நேற்று பொறுப்பேற்றார். அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க சால்வையுடன் சென்றேன். அவர் ஜாதி ரீதியாக அவமரியாதை செய்ததால் தீக்குளிக்க வந்ததாக,''கூறினார். இவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தார்.

நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: புதிய கமிஷனரை அலுவலர்கள் மரியாதைக்காக சந்தித்தனர். அப்போது நடராஜன், இந்திய குடியரசு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என கூறினார். சங்க பதவிகளை கூற வேண்டாம், பெயர், அலுவலக பதவி மட்டும் கூறினால் போதும் என கமிஷனர் கூறினார். இதை எதிர்த்து நடராஜன் இவ்வாறு செய்துள்ளார், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X