பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டு உழவர் சந்தை உயிர் பெறுமா

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு உழவர் சந்தைக்கு உயிர்கொடுக்க வேளாண் அதிகாரிகள் முன்வர வேண்டும்.வத்தலக்குண்டு உழவர் சந்தை 10 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இடம் தேர்வு செய்யப்பட்டபோது இத்திட்டம் வெற்றி பெறாது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. உழவர் சந்தை திறப்பு அன்று போலி

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு உழவர் சந்தைக்கு உயிர்கொடுக்க வேளாண் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

வத்தலக்குண்டு உழவர் சந்தை 10 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இடம் தேர்வு செய்யப்பட்டபோது இத்திட்டம் வெற்றி பெறாது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. உழவர் சந்தை திறப்பு அன்று போலி விவசாயிகளால் நிரப்பப்பட்டது. உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டிற்குள் அமைந்துள்ளதால் வியாபாரிகள் உழவர் சந்தை செயல்பட தடையாக உள்ளனர்.

வேளாண் அதிகாரிகள் கடந்த காலங்களில் வியாபாரிகளிடம் காய்கறிகளை பெற்று தனியார் விடுதிகளுக்கு அனுப்பி கணக்கு காட்டி வந்தனர். தற்போதயை அரசு புதிய உழவர் சந்தை துவக்குவதிலும், இருக்கும் சந்தையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது. வத்தலக்குண்டு உழவர்சந்தை உயிர்பெற இடம் மாற்றி அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை வேளாண் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X