பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத்தொழுகை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.தேனி- கம்பம் ரோடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தலைவர் மல்கர் ஒலி, தேனி திட்டச்சாலை புதுப்பள்ளிவாசலில் தலைவர் சம்சுதீன், கம்போஸ்ட் ஓடைத் தெருவில் உள்ள ரவத்துல் ஜன்னா பள்ளிவாசலில் தலைவர் ஹக்கீம் தலைமையில் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடந்தது. ஏராளமான முஸ்லிம்கள்

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி- கம்பம் ரோடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தலைவர் மல்கர் ஒலி, தேனி திட்டச்சாலை புதுப்பள்ளிவாசலில் தலைவர் சம்சுதீன், கம்போஸ்ட் ஓடைத் தெருவில் உள்ள ரவத்துல் ஜன்னா பள்ளிவாசலில் தலைவர் ஹக்கீம் தலைமையில் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடந்தது. ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். வீடுகளிலும் தொழுகை நடந்தது.பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை, வடகரை, தண்டுப்பாலம், தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உட்பட 20க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை நடந்தது.

பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் ஆடு இறைச்சியை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை தங்களுக்கும், பிற பகுதிகளை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் 'குர்பானி'கொடுத்து மகிழ்ந்தனர்.போடி: போடி புதுார் பெரிய பள்ளி வாசல், மேலத்தெரு பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை நடந்தது. ஏராளமானோர் ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X