சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் பெற்றோர் சகோதரருக்கு அரிவாள் வெட்டு; இருவர் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே தவசிமடையைச் சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி 65, மனைவி மரியபாக்கியம் 58. இவர்களது மகன்கள் மரியா யாகோப், அமல்ராஜ், லூர்துராஜ். மூன்றாவது மகனான லூர்துராஜ் தந்தையிடம் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். ஜூலை 20 ம் தேதி ஏற்பட்ட மோதலில் தந்தை சின்னையாவை லுார்துராஜ் அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த தாய், சகோதரர்

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே தவசிமடையைச் சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி 65, மனைவி மரியபாக்கியம் 58. இவர்களது மகன்கள் மரியா யாகோப், அமல்ராஜ், லூர்துராஜ். மூன்றாவது மகனான லூர்துராஜ் தந்தையிடம் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார்.

ஜூலை 20 ம் தேதி ஏற்பட்ட மோதலில் தந்தை சின்னையாவை லுார்துராஜ் அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த தாய், சகோதரர் மரிய யாகோப்பையும் வெட்டினார். காயம் அடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று (ஜூலை 21) சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் லூர்துராஜ் 42, தகராறில் தொடர்புடைய உறவினர் விசுவாசம் 40, ஆகியோரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X