பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுக்கத்துடன் கூடிய கல்லுாரி கல்வி கற்பிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரி 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நீண்ட நெடிய கல்வி பயணத்தை மேற்கொண்டுள்ளது. இக்கல்லுாரி 1956ல் நிறுவனர் கருத்தராவுத்தரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் கல்லுாரிகளே இல்லாத நிலையில் இதனை நிறுவினார். ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளிகளின் குழந்தைகள் நகரங்களுக்கு சென்று படிக்க முடியாத நிலையை மாற்றியது

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரி 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நீண்ட நெடிய கல்வி பயணத்தை மேற்கொண்டுள்ளது. இக்கல்லுாரி 1956ல் நிறுவனர் கருத்தராவுத்தரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் கல்லுாரிகளே இல்லாத நிலையில் இதனை நிறுவினார். ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளிகளின் குழந்தைகள் நகரங்களுக்கு சென்று படிக்க முடியாத நிலையை மாற்றியது இந்த கல்லுாரி.

முன்னாள் முதல்வர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது நிறுவனரின் மகன்களான தர்வேஷ் முகையதீன், சகோதரர்கள் நடத்துகின்றனர். இளங்கலையில் 10, முதுகலையில் 2 பாடப்பிரிவுகள், சுயநிதிப்பிரிவில் இளங்கலையில் 8, முதுகலையில் 9 பாடப்பிரிவுகள், ஆராய்ச்சியில் எம்.பில்., 5, பிஎச்.டி., 3 பாடப்பிரிவுகள் உள்ளன.மத்திய அரசின் பல தரச்சான்றுகளை பெற்றுள்ளது.

அனைத்து விளையாட்டுகளுக்கும் மைதானங்கள், உள்விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் நுாலகம், கல்லுாரி வளாகத்தில் 'வைபை' வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் வசதிமாணவிகள் கல்லுாரி வர தனி பஸ் , விடுதி வசதியும் உள்ளது. இறகுபந்து, கிரிக்கெட், வாலிபால் போன்ற போட்டிகளில் மாணவர்கள் மாநில மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே வெற்றி பெற்றுள்ளனர்.

கிராமப்புற மாணவர்களுக்கென டெய்லரிங், உணவு தயாரித்தல் போன்ற சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகிறது.மாநில, தேசிய, சர்வதேச அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஒழுக்கத்துடன் கூடிய கல்லுாரி கல்வியை வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது.எச்.முகமதுமீரான் முதல்வர், உத்தமபாளையம் 04554 265 225

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X