அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கிறார் அண்ணாமலை'

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (95)
Share
Advertisement
'துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், அரசு மற்றும் கட்சி பொறுப்புகளில், சிறுபான்மையினத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, தி.மு.க., தலைமை' என, தமிழக பா.ஜ., கருதுகிறது. இதை, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் பிரசாரமாக எடுத்து சொல்ல, பா.ஜ., நிர்வாகிகளை, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த

'துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், அரசு மற்றும் கட்சி பொறுப்புகளில், சிறுபான்மையினத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, தி.மு.க., தலைமை' என, தமிழக பா.ஜ., கருதுகிறது. இதை, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் பிரசாரமாக எடுத்து சொல்ல, பா.ஜ., நிர்வாகிகளை, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., விஜிலா சத்யானந்த் கூறியதாவது: இப்படி, மத ரீதியில் தமிழ் இனத்தை கூறுபோட்டு, பா.ஜ., அரசியல் செய்கிறது. மூன்று மாவட்டங்களிலும் சிறுபான்மை இனத்தவர், குறிப்பாக கிறிஸ்தவ மக்கள்எண்ணிக்கை அதிகம் தான்.அ ந்த வகையில், கட்சியிலும், ஆட்சியிலும், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் சிறிது கூடுதலாக இருப்பது இயற்கை தான். அதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதனால், அவருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கவில்லை.வெற்றி பெற்றவர் மனோ தங்கராஜ். மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் கொடுக்க வேண்டும் என்றால், அவருக்கு தான் கொடுக்க முடியும். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால், புறக்கணிக்க முடியாது. அதேபோல தான், திருநெல்வேலியிலும். தி.மு.க., சார்பில் ராதாபுரத்தில் வெற்றி பெற்றவர் அப்பாவு; கிறிஸ்தவர். பாளையங்கோட்டையில் வெற்றி பெற்றவர், அப்துல் வஹாப்; முஸ்லிம். ஆக, இருவரில் ஒருவருக்கு தான், அமைச்சர் பதவியோ, சபாநாயகர் பொறுப்போ கொடுக்க முடியும்.


latest tamil newsகட்சியில், 'சீனியர்' என்ற முறையில், அப்பாவுவை சபாநாயகர் ஆக்கி விட்டனர். துாத்துக்குடியில் கிறிஸ்தவரான கீதா ஜீவனுக்கும், ஹிந்துவான அனிதா ராதாகிருஷ்ண னுக்கும் அமைச்சர் பொறுப்பு அளித்துள்ளது, கட்சி தலைமை.இதில் எங்கே வருகிறது மதம்?சிறுபான்மையினத்துக்கு முக்கியத்துவம் என்று எப்படி சொல்கின்றனர்?இப்படி, மதத்தை வைத்தே, பா.ஜ., எவ்வளவு காலத்துக்கு அரசியல் செய்யும் என தெரியவில்லை. மதத்தை வைத்து, ஒரு நாளும் தி.மு.க.,வை கூறு போட முடியாது.

தமிழகத்தில், தி.மு.க., தான் மதசார்பற்ற கட்சி. எல்லாருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப் படுகிறது. என்னை கிறிஸ்தவராக அடையாளம் காணுகின்றனர். அந்த மதத்தை, நான் பின்பற்றினாலும், அடிப்படையில் ஹிந்து தான். என் முன்னோர் ஹிந்துக்கள் தான். இடையில் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியுள்ளனர். அதனால், எந்த மதத்துக்கும் ஆதரவும் அல்ல; எதிர்ப்பும் இல்லை. பொதுவாகத்தான் எல்லாரையும் பார்க்கிறோம்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவர் சார்ந்திருந்த பா.ஜ.,வுக்கு, கிறிஸ்தவர்கள் திரண்டு வந்து, ஓட்டு போட்டனர். ஆனால், அதன்பின் ஓட்டு போடவில்லை. ஏன்? இந்த பிரச்னை தான் காரணம்.

மதத்தை வைத்து, அரசியல் செய்வதை, மக்கள் ரசிக்கவில்லை. எதிர்த்து ஓட்டளிக்கின்றனர். திருநெல்வேலியில், பா.ஜ.,வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றது எப்படி என, அவரையே கேளுங்கள்.சாணார்பட்டி, குப்பனார்புரம், ஆளவந்தான் குளம், வடக்கு வாகை குளம், பார்வதியாபுரம் என எத்தனையோ கிராமங்கள், திருநெல்வேலியைச் சுற்றி உள்ளன. அங்கு கிறிஸ்தவ தலித்கள் அதிகம். அவர்கள் ஓட்டு போட்டுத் தானே, நயினார் வெற்றி பெற்றார்?

பெரும்பான்மை ஹிந்துக்கள் மட்டும் ஓட்டு போட்டு, பா.ஜ., வெற்றி பெறவில்லை என்ற அடிப்படையை, அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற சாதாரண சூத்திரம் கூட தெரியாமல், கண்டதையும் பேசி, பா.ஜ.,வுக்கு அண்ணாமலையே சூனியம் வைக்கிறார்.இவ்வாறு விஜிலா சத்யானந்த் கூறினார்.
-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூலை-202121:37:31 IST Report Abuse
Visu Iyer பா.ஜ.,வுக்கு அண்ணாமலையே சூனியம் வைக்கிறார்/// தமிழகத்திற்கு நல்லது தானே செய்கிறார்.. இதை போய் பெரியதாக சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... தாமரை இல்லாத தமிழகம் மலர வேண்டும் என்று அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
22-ஜூலை-202118:04:03 IST Report Abuse
abibabegum எம்மை விஜில நீ யாருன்னு ஊரு உலகத்துக்கே தெரியும் நேத்து நீ எங்கே மா இருந்தே உன்னுடைய சுயநலம் வெட்டவெளிச்சம் தேசிய கட்சிபற்றி பேச உனக்கு துளியளவு தகுதி இல்லை மலை .. அண்ணாமலை யாருன்னு நெனச்சே உன்னை மாதிரி சோத்துக்கு கட்சி மாரி கிடையாது உன்னை மாதிரி பச்சோந்தி கிடையாது இந்திய தேசத்தை தேசத்தின் நன்மதிப்பை நெஞ்சில் சுமப்பவர் விஜி அண்ணாமலை உன்னை போல கட்சியையும் தேசத்தையும் கட்டிக்கொடுப்பவர் கிடையாது பா.ஜ.க ஒவ்வரு தொண்டனின் ரத்தத்தில் கலந்தவர் மா அண்ணாமலை .
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-ஜூலை-202117:53:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி அப்போ ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் வேலை நிச்சயம்ன்னு சொல்லுங்க. தம்பிக்கு அடிச்சிருக்கு லாட்டரி.. 🐒🐒
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் என்ன ஆனார்? இவரை ஏன் முன்மொழிய வேண்டும்?...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
23-ஜூலை-202119:17:43 IST Report Abuse
NicoleThomsonநல்ல வேலை துண்டு சீட்டு ஊராட்சி அமைச்சரின் பதவிக்கு இவரை சொல்லவில்லையே உடன்பிறப்பே...
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
24-ஜூலை-202116:31:20 IST Report Abuse
gayathriஅது கனவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X