சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி போக்குவரத்து அமைச்சர் வீடுகளில் ரெய்டு ; அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக புகார்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து
vijayabhaskar,M.r.vijayabhaskar, raid, admk, bribe, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சொத்து குவிப்பு, வழக்கு, ரெய்டு, லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், கரூர் மற்றும் சென்னையில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரது உறவினர், நண்பர்கள் வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.

கரூர் தோரணக்கல்லபட்டில், விஜயபாஸ்கர் ஆதரவாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஏகாம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202121:07:22 IST Report Abuse
அப்புசாமி திமுக நேர்மையானவங்க. தொழில் நடத்துனா மந்திரியா இருக்க முடியாது. மந்திரியா இருந்தா சைடு பிசினஸ் நடத்த முடியாது. சமூக நீதி நிலைநாட்டப்படுகிறது.
Rate this:
Cancel
22-ஜூலை-202121:05:23 IST Report Abuse
அப்புசாமி குவாரியிலும் பணத்த புதைச்சு வெச்சிருப்பாங்களோ? பாம்பறியும் பாம்பின் கால்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
22-ஜூலை-202119:19:24 IST Report Abuse
Narayanan ஆக இவரை அவரும் அவரை இவரும் மாற்றி மாற்றி சொல்லுவார்கள் . வழக்கு வாய்தா அரசு நடக்கும் . மக்களுக்கும் செய்தி பத்திரிகைகளுக்கும் விளையாட்டு நேரம் . இவர் பணம் படைத்தவர்கள் ஆகிவிட்டு நம்மை நாற்றாற்றில் விட்டுவிடும் அரசியல் கபடதாரிகள் .l
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X