பொது செய்தி

தமிழ்நாடு

நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், 55 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது, 60 சதவீதத்தைத் தொடக்கூடும்' என்று, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.இந்தச் செய்தி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரங்கள், தொலைநோக்குப் பார்வை ஆகியவை,
 நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், 55 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது, 60 சதவீதத்தைத் தொடக்கூடும்' என்று, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.இந்தச் செய்தி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரங்கள், தொலைநோக்குப் பார்வை ஆகியவை, எப்படி அமையப் போகின்றனவோ என்ற, கவலை ஒரு பக்கம். இன்னொரு பக்கம், வேலைவாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை எதிர்நோக்கி, இளைஞர்கள் கிராமங்களை விட்டு, நகரங்களுக்கு நகர்ந்து விட்டால், அப்புறம், கிராமங்கள், நவீன முதியோர் இல்லங்களாக மாறி விடுமோ என்ற கவலை.ஏற்கனவே, சீன நாட்டில் இப்படித்தான் நடந்திருக்கிறது என்ற முன்னுதாரணமும், நம் முன் இருக்கிறது. நம்முடைய கிராமங்களுக்கு, என்ன ஆகப் போகிறதோ?

புதுச்சேரிப் பல்கலை, மானிடவியல் பேராசிரியர் ஆ.செல்லபெருமாள் கூறியதாவது:தமிழகம் மட்டுமல்ல, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களும் மிக வேகமாக நகரமயமாகி வருகின்றன. நமது அரசுகள், கிராமங்களை விட, நகரங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.திட்டங்கள் வகுத்து, நிதி ஆதாரங்களை உருவாக்கி, மேம்பாலங்கள் முதற்கொண்டு பல்வேறு பணிகளை நிறைவேற்றி வந்துள்ளன என்பது, உண்மை தான். அதற்காக, எதிர்காலத்தில், கிராமங்கள், முதியோர் இல்லங்களாக மாறி விடும் என்று, நினைக்க வேண்டியதில்லை.

இங்கே வளர்ச்சி, 'மாடல்' வித்தியாசமானது. நம் கிராமத்தில் சேமிப்பு பழக்கம் அதிகம். அவர்கள் சமுதாயமாக, அடுத்தவர்களோடு ஒருங்கிணைந்து வளர்வதில்லை. மாறாக, தனித்தனியாக, தம்மளவில் முன்னேற்றத்துக்காக உழைக்கின்றனர்.இன்றைக்கு எண்ணற்ற பெரிய தொழில்களும், கிராமங்களை நோக்கி, நகரத் துவங்கியுள்ளன. பொறியியல் கல்லுாரிகள், கலைக் கல்லுாரிகள் போன்றவையும், விசாலமான இடத் தேவைக்காக, கிராமங்களுக்கு அருகே சென்று விட்டன.

முன்னர், நகரங்கள் விரிய விரிய, பக்கத்தில் உள்ள ஊர்கள் எல்லாம், 'புறநகர்' பகுதிகளாக உருமாற்றம் அடைந்தன. அதேபோல், இப்போது, கிராமங்கள் வளரத் துவங்கியுள்ளன. அதன் பக்கத்தில் உள்ள பகுதிகள் எல்லாம் கிராமத்தின் நீட்சியாக வளர்ந்து வருகின்றன. இதற்கு, 'ரூர் அர்பன்' என்ற அர்த்தத்தில், 'புற கிராமங்களாக' உருமாற்றம் பெற்று வருகின்றன.முந்தைய இரண்டு தலைமுறை இளைஞர்கள், வேலை வாய்ப்புகளுக்காக, நகரங்களை நோக்கி நகர்ந்தனர்.

ஆனால், தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள், நகர்வதில்லை. அவர்கள் தங்கள் கிராமங்களையே, தொழிலுக்கு உகந்த பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.இவர்களோடு சேர்ந்து, இரண்டு தரப்பினர் கிராமங்களுக்குச் செல்கின்றனர். செல்வந்தர்களும், உயர் பதவியில் இருந்த அதிகாரிகளும், தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்காகச் செல்கின்றனர். இவர்கள் பெரிய அளவில் இல்லை.

ஆனால், 15, 20 ஆண்டுகளாக, ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிவிட்டு, புதிய வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள், மீண்டும் கிராமங்களை நோக்கி வருகின்றனர். இயற்கை விவசாயம் முதற்கொண்டு, பல்வேறு புதிய உத்திகளை, அங்கே செயல்படுத்தி பார்க்க விரும்புகின்றனர்.இவர்களாலும், நம் கிராமங்களில் புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்பது, உண்மை தான். கிராமங்கள் புதிய முகமும், வடிவமும் பெற்று வருகின்றன. அவை கைவிடப்பட்டவையாக, இனியும் கருத வேண்டியதில்லை.இவ்வாறு, செல்லபெருமாள் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murali - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202113:32:42 IST Report Abuse
Murali பிறந்த ஊரை மறக்கலாமா ? வளர்த்த ஊரை உதறிடலாமா ? பணி ஓய்வு பெற்று திரும்பிவந்து சொந்த ஊரில் வாழ்வது ஒரு வரம் .தமது மகன் மற்றும் மகள் வாழ்க்கை அவரவர் வாழட்டும் . ஆண்டிற்கு சிலமுறை நீங்களோ அல்லது அவர்களோ வந்து பார்க்கட்டும் . கிராமத்தில் உள்ள வீட்டில் வேண்டிய வசதிகள் செய்துகொண்டு ,சுற்றும் மற்றும் எல்லோர்க்கும் உதவிகள் செய்து நிம்மதியாக வாழ கொடுத்து வைக்கவேண்டும் நண்பர்களே உங்கள் ஊருக்கு 100 பணி ஒய்வு பெற்றவர்கள் வசிக்க வந்தாலே ஒரு மாற்றம் உருவாகும் .அவர்கள் கூட பணம் மட்டுமல்ல அறிவு, திறன் மற்றும் அனுவகவமும் கூட வருகிறது .அவர்களுக்கு சிறிது மரியாதை கொடுத்தாலே போதும் . கிராமபுறங்களில் மாற்றத்தை பார்க்கலாம் . ஒரு பகுதி வளர பணப்புழக்கம் தேவை . நல்லவர்களின் பணம் நாலுபேரை காப்பாற்றும் . லஞ்சம் மற்றும் திருட்டு வழியில் வந்தப்பணம் முதலில் அவரது குடும்பத்தை அழிக்கும் . மற்றவர்களுக்கு பயனும் இருக்காது . எங்கு பிறந்தோம் என்பது மட்டும் சொந்த ஊர் அல்ல ,எங்கு நாம் இறக்கவேண்டும் என்று நினைப்பதும் தான் முரளி சிங்கை
Rate this:
Cancel
Murali - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202111:02:32 IST Report Abuse
Murali றந்த ஊரை மறக்கலாமா? வளர்த்த ஊரை உதறிடலாமா? பணி ஓய்வு பெற்று திரும்பிவந்து சொந்த ஊரில் வாழ்வது ஒரு வரம். தமது மகன் மற்றும் மகள் வாழ்க்கை அவரவர் வாழட்டும் . ஆண்டிற்கு சிலமுறை நீங்களோ அல்லது அவர்களோ வந்து பார்க்கட்டும். கிராமத்தில் உள்ள வீட்டில் வேண்டிய வசதிகள் செய்துகொண்டு,சுற்றும் மற்றும் எல்லோர்க்கும் உதவிகள் செய்து நிம்மதியாக வாழ கொடுத்து வைக்கவேண்டும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஜூலை-202109:24:02 IST Report Abuse
RajanRajan ஒரு காலத்திலே பஸ்ஸுக்கு களலர்கலரா பெயிண்ட் அடிச்சு பயணிகள் கட்டணத்தை கூட்டி வடை பண்ணி சாப்பிட்டனுங்க. இப்போ அங்கலாய்க்கிறானுங்க. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X