பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் பலத்த காற்றுடன் கனமழை: அவலாஞ்சியில் மழை அதிகரிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில் இரு வாரங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று, மாலை முதல் பலத்த காற்றுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. ஊட்டி, குந்தா உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இன்று, காலை, 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சி, 116 மி.மீ., மழை பதிவானது, பெரும்பாலான இடங்களில், 20 மி.மீ., அதிகமாக மழை பதிவானது. சராசரி

ஊட்டி: நீலகிரியில் இரு வாரங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று, மாலை முதல் பலத்த காற்றுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. ஊட்டி, குந்தா உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
இன்று, காலை, 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சி, 116 மி.மீ., மழை பதிவானது, பெரும்பாலான இடங்களில், 20 மி.மீ., அதிகமாக மழை பதிவானது. சராசரி மழை அளவு, 27. 61 மி.மீ., பதிவானது.

இந்த மழைக்கு குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள அப்பர் பவானி, கோர குந்தா, அவலாஞ்சி, காட்டு குப்பை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளின் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குந்தா அணைக்கு வினாடிக்கு, 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும் என, மின் வாரியம் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X