பா.ஜ.,வின் உண்மை தொண்டனாக இருப்பதில் பெருமை: எடியூரப்பா| Dinamalar

பா.ஜ.,வின் உண்மை தொண்டனாக இருப்பதில் பெருமை: எடியூரப்பா

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (8)
Share
பெங்களூரு: பா.ஜ.,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்வதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலேயே பலரும் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக கர்நாடகா மாநில பா.ஜ.,வில் புகைச்சல் நீடிக்கிறது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவரை முதல்வர்
BJP, Karnataka, Yediyurappa, Tweet, பாஜக, கர்நாடகா, உண்மை தொண்டன், எடியூரப்பா, முதல்வர், கருத்து

பெங்களூரு: பா.ஜ.,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்வதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலேயே பலரும் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக கர்நாடகா மாநில பா.ஜ.,வில் புகைச்சல் நீடிக்கிறது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மேலிட பொறுப்பாளர்களுக்கு கையெழுத்துடன் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மேலிட பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.


latest tamil news


இதனால், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார். வரும் 26-ந் தேதி நடக்கவுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
பா.ஜ.,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ, மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். எடியூரப்பாவின் இந்த பதிவு கர்நாடக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X