எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவை பா.ஜ., ஆள முடியாது: சுப்பிரமணிய சாமி எச்சரிக்கை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ., கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்வர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ., கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்வர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.



latest tamil news



இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில், 'கர்நாடகாவில் முதன்முதலில் பா.ஜ., ஆட்சியை கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பா.ஜ.,வை நடத்த முடியாது. பா.ஜ.,வுக்கு மீண்டும் எடியூரப்பா வந்தபின்தான் வெற்றி பெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



எடியூரப்பாவுக்கு நீண்டகாலமாகவே சுப்பிரமணிய சாமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார். தற்போது எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பறவியதையடுத்து, லிங்காயத் சமூகத்தின் மடாதிபதிகள் பலர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
22-ஜூலை-202120:46:56 IST Report Abuse
Arul Narayanan அவர் சொல்வதில் என்ன தவறு? அவர் கருத்தை சரியா தவறா என விமர்சியுங்கள்.
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
22-ஜூலை-202120:21:28 IST Report Abuse
Ganesh Shetty எப்போதிலுருந்து இந்திய தலைவர் ஆகிவிட்டார் இந்த சாமி கடந்த ஆட்சியில் 2 ஜி என்று பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில் குப்புற கவிழிந்தது தான் மிச்சம் இப்போது எடியூரப்பா வேண்டும் என்கிறார் இந்த சாமி.கடந்த ஊழல் பேர்வழி என்று கர்நாடகாவே காரி துப்புகிறது.ஐவரும் இவரது மகன் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை இவர் தொடர்ந்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது என்று மக்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-ஜூலை-202117:04:47 IST Report Abuse
ganapati sb உண்மைதான் எடியூரப்பாவின் உழைப்பால் செல்வாக்கால் பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது . ஆனாலும் ஆட்சியில் இருக்கும் போதே அடுத்த தலைமுறை தலைமையையும் வளத்தெடுக்க வேண்டும் . கேசுபாய் படேல் இருக்கையில் நரேந்திரமோடி வந்தது போல நிதின் கட்கரி இருக்கையில் தேவேந்திர பிட்னவிஸ் வந்தது போல ராஜ்நாத் இருக்கையில் யோகி ஆதித்யநாத் வந்தது போல எடியூரப்பா இருக்கையில் தேஜஸ்வி சூர்யா போன்ற ஒருவரை கர்நாடகத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X