எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவை பா.ஜ., ஆள முடியாது: சுப்பிரமணிய சாமி எச்சரிக்கை| Dinamalar

எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவை பா.ஜ., ஆள முடியாது: சுப்பிரமணிய சாமி எச்சரிக்கை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (12) | |
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ., கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்வர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ., கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்வர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.



latest tamil news



இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில், 'கர்நாடகாவில் முதன்முதலில் பா.ஜ., ஆட்சியை கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பா.ஜ.,வை நடத்த முடியாது. பா.ஜ.,வுக்கு மீண்டும் எடியூரப்பா வந்தபின்தான் வெற்றி பெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



எடியூரப்பாவுக்கு நீண்டகாலமாகவே சுப்பிரமணிய சாமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார். தற்போது எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பறவியதையடுத்து, லிங்காயத் சமூகத்தின் மடாதிபதிகள் பலர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X