விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் உள்ளிட்ட காங்., எம்.பி.,க்கள் போராட்டம்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியில் டில்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று (ஜூலை 22) பார்லிமென்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக பார்லி.,யின் முன்புள்ள காந்தி சிலை அருகே ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.மத்திய அரசின்
FarmLaws, Farmer Protest, Congress, MPs, Rahul, Parliament, வேளாண் சட்டங்கள், விவசாயிகள், போராட்டம், பார்லிமென்ட், காங்கிரஸ், ராகுல், எம்பிக்கள்

புதுடில்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியில் டில்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று (ஜூலை 22) பார்லிமென்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக பார்லி.,யின் முன்புள்ள காந்தி சிலை அருகே ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கூட்டத்தொடர் முடியும் வரையில் பார்லி., வெளியே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.


latest tamil newsஆனால், கோவிட் பரவல் காலம் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத்தொடர்ந்து தடையை மீறி பார்லிமெண்ட் முற்றுகை போராட்டத்தை நடத்துவதாக விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி, பார்லிமெண்டை நோக்கி கிளம்பிய விவசாயிகளை டில்லி எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போராட்டத்தையொட்டி முக்கிய எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202116:17:42 IST Report Abuse
Sriram V Now people supporting these groups must understand that these people are working for middle men and leftists backed by Chinese sponsored protesting fake farmers
Rate this:
Cancel
22-ஜூலை-202114:10:43 IST Report Abuse
உண்மை ராகுல் படும்பாடு, மற்றவர்களையும் படுத்தும் பாடு இதுதான். அரசியல் வியாபாரம் சரியான முறையில் நடத்த முடியவில்லை என்று டிசைன் டிசைனாக நாடகம் நடத்தி பார்க்கிறார். ஒன்றும் போணியாக மாட்டேங்குது. இன்னும் நிறைய வரும். போன் ஒட்டுக் கேட்பு விவகாரம், எரிபொருள் விலை உயர்வு, மின்துறை மசோதா, இன்னும் ஏராளம். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஒன்றும் மாறாது. மக்கள் நலன் காக்க இவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கே வெளிச்சம். யாரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசவும் தெரியாது. "ஆசை இருக்கு அரசாள்வதற்கு ,யோகம் இருக்கு கழுதை மேய்க்க" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22-ஜூலை-202112:59:13 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் அஜெண்டாவில் வேறு எதுவும் இல்லை போலும். ஆகையால், மீண்டும் இந்த 'பணக்கார விவசாயிகளின் போராட்டத்தை' கையில் எடுத்திருக்கிறது இந்த 'கை சின்ன' கட்சி... பாவம், அவங்களுக்கும் நேரம் போகணும் இல்ல... ஊழல் செய்து கொண்டிருந்த அவர்களுக்கு இப்ப நேரம் போக மாட்டேன் என்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X